ஹிருத்திக் ரோஷன் பிறந்தநாள்...பெரிய ஹக் உடன் வாழ்த்து சொன்ன முன்னாள் மனைவி

மும்பை : பாலிவுட் டாப் ஹீரோக்களில் ஒருவரான ஹிருத்திக் ரோஷன் இன்று தனது 48 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு அவரது ரசிகர்கள், திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ஹிருத்திக்கின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்து வரும் விக்ரம் வேதா படத்தின் இந்தி வெர்சன் படத்தின் ஃபஸ்ட்லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. செப்டம்பர் 30 ம் தேதி ரிலீசாக உள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதி நடித்த வேதா ரோலில் ஹிருத்திக் ரோஷன் நடித்துள்ளார்.

ஆச்சரியப்படுத்திய சுசானா

ஆச்சரியப்படுத்திய சுசானா

இந்நிலையில் ஹிருத்திக்கின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது முன்னாள் மனைவி சுசானா கான் பதிவிட்டுள்ள வாழ்த்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. தனது மகன்களுடன் ஹிருத்திக் ரோஷன் செலவிட்ட சில மகிழ்ச்சியான மறக்க முடியாத தருணங்களை வீடியோவாக பதிவிட்டுள்ளார் சுசானா.

பெரிய ஹக்

பெரிய ஹக்

மேலும் அதோடு, Happy happy birthday Rye...நீ அற்புதமான அப்பா...உன்னை போன்ற அப்பாவை பெற்றதற்காக Hrehaan மற்றும் Hridhaan ஆகியோர் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். உனது அனைத்து கனவுகளும், விருப்பங்களும் இன்று போல் என்றும் நிஜமாக வேண்டும். Bigggg hug என கேப்ஷன் பதிவிட்டுள்ளார். இருவரும் பிரிந்து வாழும் நிலையில் சுசானாவின் இந்த வாழ்த்து ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

பிரிந்து வாழும் தம்பதி

பிரிந்து வாழும் தம்பதி

ஹிருத்திக் ரோஷன் மற்றும் சுசானா கான் இருவருக்கும் 2000 ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் பிறந்த நிலையில் 2014 ம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். இருந்தாலும் அடிக்கடி தனது மகன்களை அழைத்துக் கொண்டு இருவரும் விடுமுறையை செலவிடுவதும், அந்த போட்டோக்களை பகிர்வதுமாக இருந்தனர்.

மீண்டும் சேர போகிறாரா

மீண்டும் சேர போகிறாரா

சுசானா தற்போது நடிகர் Arslaan Goni உடன் டேட்டிங் செய்து வருகிறார். இந்நிலையில் தனது முன்னாள் கணவருக்கு இவ்வளவு காதலுடன் அவர் கூறி இருக்கும் வாழ்த்து குழப்பமடைய வைத்துள்ளது. ஹிருத்திக் ரோஷனுடன் சுசானா மீண்டும் இணைய போகிறாரா என்ற சந்தேகத்தையும் கிளப்பி உள்ளது.

Recommended Video

என்னோட CRUSH ம் HRITHIK ROSHAN தான் | ACTRESS DEEPTI SATI CHAT| FILMIBEAT TAMIL
பிறந்தநாளில் புதிய படம்

பிறந்தநாளில் புதிய படம்

ஹிருத்திக் ரோஷனின் கடந்த ஆண்டு பிறந்தநாளின் போது தீபிகா படுகோனுடன் அவர் இணைந்து நடிக்கும் Fighter படம் பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டது. கடைசியாக ஹிருத்திக் நடிப்பில் 2019 ம் ஆண்டு War படம் வெளியானது. அதே ஆண்டு சூப்பர் 30 படத்திலும் ஹிருத்திக் நடித்தார். தற்போது இந்த ஆண்டு பிறந்தநாளுக்கு விக்ரம் வேதா படத்தின் ஃபஸ்ட்லுக் வெளியிடப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X