சென்னையில் ஹ்ரித்திக் ரோஷன்... ரசிக - ரசிகைகள் குவிந்தனர்!
சென்னை: சென்னைக்கு வந்த நடிகர் ஹ்ரித்திக் ரோஷனைக் காண ரசிகர் - ரசிகைகள் சத்யம் அரங்கில் குவிந்தனர்.
பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஹ்ரித்திக் ரோஷன் தனது க்ரிஷ் 3 படத்தின் வெற்றியைக் கொண்டாட வந்திருந்த ஹ்ரித்திக் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

ரூ.203 கோடி வசூல்
ஹ்ரித்திக்கின் தந்தை ராகேஷ் ரோஷன் இயக்கிய இந்தப் படம் இதுவரை உலகம் முழுவதும் ரூ.203 கோடி வசூல் செய்து இருக்கிறது. கிரிஷ்-3 படம் சென்னை உள்பட பல இடங்களில் தமிழிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை ரசிகர்களுடன்...
தமிழ் ரசிகர்களை சந்திப்பதற்காக ஹிருத்திக் ரோஷனும், அவருடைய தந்தை ராகேஷ் ரோஷனும் சென்னை வந்தார்கள். இருவரும் சத்யம் தியேட்டரில் ரசிகர்கள் முன்பு தோன்றினார்கள். ஹிருத்திக் ரோஷனை நேரில் பார்ப்பதற்காக ரசிகர்கள்-ரசிகைகள் கூட்டம் அலைமோதியது.

அன்பில் நெகிழ்ந்தேன்
ரசிகர்கள் மத்தியில், ஹிருத்திக் ரோஷன் பேசுகையில், "உங்கள் அன்பை நேரில் பார்த்து நெகிழ்ந்து போனேன். நீங்கள் என் மீது காட்டிய பாசத்தில் எனக்கு மூச்சு திணறி விட்டது. மனசெல்லாம் நிறைந்து இருக்கிறது. பேசுவதற்கு வார்த்தைகள் வரவில்லை. இதுபோன்ற அன்பை உலகில் நான் எங்கும் பார்த்ததில்லை" என்றார்.

யார் சூப்பர்?
பின்னர் அவரிடம் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளும் அவர் அளித்த பதில்களும்...
சூப்பர் ஹீரோவாக நடித்திருக்கும் நீங்கள் சூப்பர் ஹீரோயின் என்று யாரை சொல்வீர்கள்?, என்ற கேள்விக்கு, "என் அம்மா, மனைவி, சகோதரி ஆகிய மூன்று பேரும் சூப்பர் ஹீரோயின்கள்தான்," என்றார்.

ஷாரூக் போல...
"ஷாருக்கான் தனது படங்களில் தமிழ் நடிகர்களை நடிக்க வைக்கிறார். தமிழ் வசனங்களைப் பேசுகிறார். அதுபோல் நீங்களும் உங்கள் படங்களில் தமிழ் நடிகர்களை நடிக்க வைப்பீர்களா, தமிழ் வசனங்களைப் பேசுவீர்களா?"
"என் அடுத்த படத்தில் நிச்சயமாக தமிழ் நடிகர்களை நடிக்க வைப்பேன். தமிழ் வசனங்களை என் படங்களில் பயன்படுத்துவேன்."


Click it and Unblock the Notifications











