சூசன் ரூ.400 கோடி ஜுவனாம்சம் கேட்டாரா?: நடிகர் ரித்திக் ரோஷன் கோபம்
மும்பை: தனது முன்னாள் மனைவி ரூ.400 கோடி ஜீவனாம்சம் கேட்டதாக வெளியான தகவல்களால் நடிகர் ரித்திக் ரோஷன் கோபம் அடைந்துள்ளார்.
4 ஆண்டுகள் காதலித்து கடந்த 2000ம் ஆண்டு டிசம்பர் மாதம் 20ம் தேதி திருமணம் செய்து கொண்டவர்கள் நடிகர் ரித்திக் ரோஷனும், சூசனும். ரிஹான், ரிதான் என்ற 2 குழந்தைகளுக்கு பெற்றோர் ஆகினர்.
திருமணமாகி 13 ஆண்டுகள் கழித்து கடந்த டிசம்பர் மாதம் அவர்கள் பிரிவதாக அறிவித்தனர்.

விவாகரத்து
பிரிவு குறித்து அறிவித்த ரித்திக் மற்றும் சூசன் கடந்த ஏப்ரல் மாதம் விவாகரத்து கோரி நீதிமன்றத்தை அணுகினர்.

ரூ.400 கோடி
சூசன் ரித்திக்கிடம் ரூ. 400 கோடி ஜீவனாம்சம் கேட்பதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

பணமா?
நிதி மற்றும் பணம் குறித்த பேச்சே ரித்திக் மற்றும் சூசன் இடையே எழவில்லை. பணம் அவர்களுக்கு முக்கியம் இல்லை என்பதால் அது குறித்து நீதிமன்றமே முடிவு செய்யட்டும் என்று அவர்கள் தீர்மானித்துவிட்டனர் என்று அவர்களின் நண்பர் ஒருவர் தெரிவித்தார்.

சூசன்
சூசன் யாரையும் சார்ந்திராத பெண். அவரே தனக்கு சொந்தமான தொழிலை நடத்தி வருகிறார். அதனால் விவாகரத்தில் பண பிரச்சனை என்பது கட்டுக்கதையே என்று அந்த நண்பர் தெரிவித்தார்.
ரித்திக்
கற்பனை செய்திகள். எனது அன்புக்குரியவர்களை அவமதிப்பதாகும். என் பொறுமையை சோதிக்கிறார்கள் என்று ரித்திக் ரோஷன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











