உலகின் செக்சியான ஆசிய ஆணாக நடிகர் ரித்திக் ரோஷன் தேர்வு
லண்டன்: ஆசியாவின் மிகவும் வசீகரமான ஆணாக பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இங்கிலாந்தைச் சேர்ந்த வார இதழான ஈஸ்டர்ன் ஐ ஆசியாவின் மிகவும் வசீகரமான ஆண் யார் என்பது குறித்து கணக்கெடுப்பு நடத்தி பட்டியலை வெளியிட்டுள்ளது. 50 பெயர்கள் அடங்கிய இந்த பட்டியலில் பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷனுக்கு முதலிடம் கிடைத்துள்ளது.
பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா கவர்ச்சிகரமான ஆசிய பெண்ணாக தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் ரித்திக் வசீகரமான ஆசிய ஆணாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ரித்திக்
ஆசியாவின் வசீகரமான ஆணாக ரித்திக் 4 ஆண்டுகளில் மூன்று முறை தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

குஷால் டாண்டன்
தொலைக்காட்சி நடிகர் குஷால் டாண்டன் ஈஸ்டர்ன் ஐ பட்டியலில் 2வது இடத்தை பிடித்துள்ளார்.

அலி ஜாபர்
கடந்த ஆண்டு இந்த பட்டியலில் முதலிடத்தை பிடித்த பாகிஸ்தானிய நடிகர் அலி ஜாபர் இந்த ஆண்டு மூன்றாவது இடத்தில் உள்ளார்.

விவியன்
தொலைக்காட்சி நடிகர் விவியன் டிசேனா 4வது இடத்தில் உள்ளார். அவர் முதன் முறையாக இந்த பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் வந்துள்ளார்.

ஃபவாத் கான்
சோனாக்ஷி சின்ஹாவின் காதலர் என்று கிசுகிசுக்கப்படும் பாகிஸ்தானிய நடிகர் ஃபவாத் கான் இந்த பட்டியலில் 7வது இடத்தில் உள்ளார்.

சல்மான் கான்
ஈஸ்டர்ன் ஐ பட்டியலில் ஷாஹித் கபூர் 5வது இடத்திலும், ரன்பீர் கபூர் 8வது இடத்திலும், சல்மான் கான் 10வது இடத்திலும், ஷாருக்கான் 13வது இடத்திலும், அர்ஜுன் கபூர் 18வது இடத்திலும், ரன்வீர் சிங் 22வது இடத்திலும் உள்ளனர்.

சூர்யா
ஆசியாவின் வசீகரமான 50 ஆண்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ள ஒரே தமிழ் நடிகர் சூர்யா தான் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு 50வது இடம் கிடைத்துள்ளது.

கோஹ்லி
ஈஸ்டர்ன் ஐ பட்டியலில் இடம்பிடித்துள்ள ஒரே விளையாட்டு வீரர் விராத் கோஹ்லி. அவருக்கு 38வது இடம் கிடைத்துள்ளது.


Click it and Unblock the Notifications











