விஜய்யை இம்பிரஸ் பண்ண ரித்திக் ரோஷன்
சென்னை: ரித்திக் ரோஷனின் க்ரிஷ் 3 படத்தை பார்த்த விஜய் ரொம்பவே இம்பிரஸாகிவிட்டாராம்.
பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன் நடித்த க்ரிஷ் 3 படத்தை விஜய் தனது குடும்பத்தோடு பார்த்துள்ளார். அவர்கள் அனைவருக்கும் படம் மிகவும் பிடித்துவிட்டதாம்.
இதையடுத்து ரித்திக்கை சந்தித்து பாராட்ட நினைத்தாராம் விஜய். இது குறித்து விஜய்யின் மேனேஜர் செல்வகுமார் கூறுகையில்,

வாவ் ரித்திக்
விஜய் சார் அண்மையில் தனது குடும்பத்தோடு க்ரிஷ் 3 படத்தை பார்த்து மகிழ்ந்தார். அவர் ரித்திக்கின் கடின உழைப்பை பார்த்து வியந்தார். இது போன்ற ஒரு அட்வென்சர் படத்தை பார்த்து பல காலமாகிவிட்டது என்றார் என செல்வகுமார் தெரிவித்தார்.

நேரில் பாராட்ட ஆசை
ரித்திக் ரோஷனை நேரில் பார்த்து பாராட்ட விரும்பினார் விஜய். ஆனால் அவர் ஜில்லா படப்பிடிப்பில் பிசியாக இருப்பதால் அது முடியவில்லை என்றார் செல்வகுமார்.

சென்னையில் ரித்திக்
க்ரிஷ் 3 வெற்றியை கொண்டாட ரித்திக் தனது தந்தை ராகேஷ் ரோஷனுடன் நேற்று சென்னை வந்திருந்தார். சென்னையில் அவருக்கு ரசிகர்கள் அளித்த வரவேற்பில் மனிதர் அசந்துவிட்டார்.

ரூ.200 கோடி
க்ரிஷ் 3 படம் ரூ.200 கோடி வசூல் செய்துள்ளது. இந்நிலையில் அடுத்த பாகத்தை எடுக்க முடிவு செய்துள்ளார் இயக்குனர் ராகேஷ் ரோஷன்.


Click it and Unblock the Notifications











