ராம்ப் வாக்கில் கத்ரீனா கைஃபின் 'பேக்'கை தட்டிய ரித்திக் ரோஷன்
மும்பை: பேன்டலூன்ஸ் நிகழ்ச்சியில் ராம்ப் வாக் செய்கையில் நடிகர் ரித்திக் ரோஷன் கத்ரீனா கைஃபின் பின்புறத்தில் தட்டியது பலரை வியக்க வைத்துள்ளது.
ரித்திக் ரோஷன், கத்ரீனா கைஃப் சேர்ந்து நடித்துள்ள படம் பேங் பேங். இதில் ரித்திக், கத்ரீனா இடையே அனல் அல்ல தீ பிடிக்கும் அளவுக்கு கெமிஸ்ட்ரி ஒர்க்அவுட் ஆகியுள்ளதாம்.
இந்நிலையில் அவர்கள் பேன்டலூன்ஸின் பேங் பேங் கலெக்ஷன் அறிமுக நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

ராம்ப் வாக்
நிகழ்ச்சியில் ரித்திக்கும், கத்ரீனாவும் ராம்ப் வாக் செய்தனர். அப்போது கத்ரீனா ஒரு டான்ஸ் ஸ்டெப்ஸை போட்டார்.

ரித்திக்
டான்ஸ் ஸ்டெப் போட்ட கத்ரீனாவின் அருகில் வந்த ரித்திக் அவரின் பின்புறத்தில் லேசாக தட்டினார். இது பலரையும் வியக்க வைத்தது.

கத்ரீனா
ரித்திக் தட்டியதை கத்ரீனாவே பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் தில் படத்தில் வரும் லைலா சிரிப்பது போன்று ம்ம்ம்ம் என்று சிரித்துவிட்டு சென்றுவிட்டார்.

முத்தம்
ஜிந்தகி நா மிலேகி தோ பாரா படத்தில் நடித்தபோது கத்ரீனா ரித்திக்கிற்கு லிப் டூ லிப் கொடுக்கும் காட்சிக்கு மட்டும் ஒரு நாள் ஒதுக்கி பல டேக்குகள் வாங்கினார். இதனால் ரித்திக்கின் முன்னாள் மனைவி சூசன் பொங்கி எழுந்தார். இந்நிலையில் பேங் பேங் படத்திலும் லிப் டூ லிப் காட்சிக்கு மட்டும் ஒரு நாள் கால்ஷீட் கொடுத்திருக்கிறார் கத்ரீனா.


Click it and Unblock the Notifications











