ரஜினியுடன் வாய்ப்பு கிடைத்தால்.. ஹிருத்திக் ஆசை
மும்பை: சூப்பர்ஸ்டார் ரஜினி ரசிகரான தனக்கு, அவருடன் மீண்டும் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் அதை நிச்சயம் பயன் படுத்திக் கொள்வேன் எனத் தெரிவித்துள்ளார் பிரபல இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன்.
சித்தார்த் ராஜ் ஆனந்த் இயக்கத்தில் நடிகர் ஹிருத்திக் ரோஷன் நடித்துள்ள படம் ‘பேங் பேங்'. இப்படத்தில் ஹிருத்திக் ஜோடியாக கத்ரீனா கைப் நடித்துள்ளார். சுமார் ரூ. 130 கோடி செலவில் பிரமாண்டமாக தயாரிக்கப் பட்டுள்ள இப்படம் வரும் அக்டோபர் 2ம் தேதி ரிலீசாக உள்ளது. இந்திப்படமான பேங் பேங் தமிழ் மற்றும் தெலுங்கிலும் வெளிவர இருக்கிறது.
இந்நிலையில், தனது புதிய படம் தொடர்பாக நேற்று மும்பையில் செய்தியாளர்களைச் சந்தித்தார் ஹிருத்திக் ரோஷன். அப்போது அவர் கூறியதாவது :-

முக்கியப்படம்...
எனது வாழ்நாளில் நடித்த படங்களில் ‘பேங் பேங்' மிகவும் முக்கியமானது. இந்த படத்துக்காக கடுமையாக உழைத்து உள்ளேன்.

கடும் தலைவலி...
10 நாட்கள் தண்ணீரில் படப்பிடிப்பு நடந்தது. தினமும் 10 தடவை 40 அடி உயரத்தில் இருந்து தண்ணீரில் குதித்து நடித்து உள்ளேன். இதனால் எனக்கு மிகவும் மோசமான தலைவலி ஏற்பட்டது.

ரத்தக்கட்டு...
டாக்டரை அணுகிய போது, எனக்கு தலையில் ரத்தக்கட்டு ஏற்பட்டு இருப்பதாக தெரிவித்தார். ஆனால் படத்தில் முழு கவனம் செலுத்தி நடித்து முடித்தேன்.

அறுவைச் சிகிச்சை...
இதைத் தொடர்ந்து தலையில் ஏற்பட்ட ரத்தக்கட்டுக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டேன். 4 மணி நேரம் அறுவை சிகிச்சை நடந்தது. 3 மாதம் டி.வி. பார்க்க கூடாது, யாரிடமும் பேசக்கூடாது என்று டாக்டர்கள் கட்டுப்பாடு விதித்தனர்.

கோடூர அனுபவம்...
இந்த அனுபவம் கொடூரமாக இருந்தது. ஆங்கில சினிமா பாணியில் இந்த படத்தில் சண்டை காட்சிகள் இடம்பெற்று உள்ளன. குடும்பமாக வந்து படத்தை பார்த்து ரசிக்க வேண்டும்.

பிரபுதேவாவின் திறமைகள்..
நடனமாடுவதில் மைக்கேல் ஜாக்சனை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவரது நடனம் மூலம் நான் நிறைய கற்றுக்கொண்டேன். பிரபுதேவாவிடம் நிறைய திறமைகள் உள்ளன.

ரஜினிகாந்துடன்...
நான் ரஜினிகாந்தின் ரசிகன். அவரது ஸ்டைல் எனக்கு மிகவும் பிடிக்கும். ரஜினிகாந்துடன் நான் குழந்தை நட்சத்திரமாக நடித்து உள்ளேன். மீண்டும் வாய்ப்பு கிடைத்தால் அவருடன் நடிப்பேன்.

இது தான் காரணம்...
தமிழ் மொழி தெரியாததால் என்னால் நேரடித் தமிழ்ப் படங்களில் நடிக்க முடியவில்லை' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











