ராவும் பகலுமா 20 படம் நடிக்கப் போறேண்ணே... வடிவேலு அதிரடி !

By Sudha

சென்னை: கேப்பே விடாம 20 படம் நடிக்கப் போறேண்ணே.. பார்த்துக்கிட்டே இருங்க என்று தனது நட்பு வட்டாரத்திடம் படு நம்பிக்கையோடு பேச ஆரம்பித்துள்ளாராம் வடிவேலு...

வடிவேலுவின் இந்த அதிரடி அறிவிப்பால் அவரது நட்பு வட்டாரம் உற்சாகமாகியுள்ளது. மேலும் ரசிகர்களுக்கும் பெரும் சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளதாம்.

தற்போது நடித்து வரும் தெனாலிராமன் படத்திலும் படு கலக்கலாக தனது காமெடி போர்ஷன் வருவதற்காக மெனக்கெட்டு வருகிறாராம் வடிவேலு.

இந்த வாய் இருக்குல்ல வாய்...!

இந்த வாய் இருக்குல்ல வாய்...!

வாயால் கெட்டவர்கள் வரிசையில் முதலிடத்தில் இருப்பவர் வடிவேலு. திமுகவுக்காக பிரசாரம் செய்யப் போய், ஏகப்பட்ட பஞ்சாயத்தைக் கூட்டிக் கொண்டு வந்து கும்மியடிக்க விட்டு அதற்குள் அவர் போய் மாட்டிக் கொண்டார்.

சத்தம் போடாமல் வந்த சிக்கல்

சத்தம் போடாமல் வந்த சிக்கல்

அவர் பிரசாரம் செய்த கட்சி படுதோல்வி அடைய, அவர் யாரை எதிர்த்து கடுமையாக வசை பாடினாரோ அவர் எதிர்க்கட்சித் தலைவர் ஆகி விட, அவர் கூட்டணியில் இடம் பெற்றிருந்த ஆட்சியைப் பிடிக்க, சத்தம் போடாமல் திரையுலகினர் வடிவேலுவை ஒதுக்கி விட்டனர்.

நல்ல ரெஸ்ட்

நல்ல ரெஸ்ட்

இதனால் கடந்த பல மாதங்களாக ஒரு புதுப் படத்திலும் நடிக்காமல் நல்ல ஓய்வில் இருந்து வந்தார் வடிவேலு.

மறுபடியும் நடிப்பு

மறுபடியும் நடிப்பு

இந்த நிலையில் மிக நீண்ட இடைவேளைக்குப் பிறகு மறுபடியும் அரிதாரம் பூசி நடிக்க ஆரம்பித்துள்ளார் வடிவேலு. தெனாலிராமன் படத்தில் நடித்து வரும் வடிவேலு, இதில் நிறையவே மெனக்கெட்டு தனது பாணி நடிப்பை கொட்டிக் கொண்டிருக்கிறாராம்.

தீபாவளிக்கு வந்துரனும்

தீபாவளிக்கு வந்துரனும்

எப்படியும் இந்த தீபாவளிக்குப் படத்தை திரைக்குக் கொண்டு வந்து விட வேண்டும் என்பதில் மும்முரமாக இருக்கிறாராம் வடிவேலு.

செமையா இருக்கும்ணே படம்

செமையா இருக்கும்ணே படம்

இந்தப் படம் குறித்து தனக்கு நெருக்கமானவர்களிடம் சிலாகித்துப் பேசி வருகிறாராம் வடிவேலு. இந்தப் படம் இத்தனை நாள் பட்டினியைப் போக்கும் வகையில் சிறப்பாக, அலப்பறையாக இருக்கும் என்று சொல்லி வருகிறாராம்.

பஞ்சமெல்லாம் போகப் போகுதுண்ணே...

பஞ்சமெல்லாம் போகப் போகுதுண்ணே...

மேலும் தனது நடிப்புக்கு மாற்றாக இதுவரை எதுவும் வரவில்லை என்று கூறும் வடிவேலு, தனது காமெடிப் பஞ்சம் இனிமேல் அகன்று விடும் என்றும் நம்பிக்கையோடு கூறுகிறார்.

20 படம்ணே...

20 படம்ணே...

அத்தோடு நில்லாமல், இனிமேல் தொடர்ச்சியாக நடிக்கப் போகிறேன். ஒரு படம் அல்ல 2 படம் அல்ல.. 20 படத்துல நடிக்கப் போறேண்ணே. கேப்பே விடாம தொடர்ச்சியா நடிப்பேன். ராவும் பகலுமா நடிக்கப் போறேன் என்றும் தெம்பாக கூறி வருகிறாராம்.

வடிவேலு.. நீ நடி வேலு...!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X