ரீமேக் படங்களே பண்ணாத ஹீரோ நான்தான்.. நடிகர் சிவகார்த்திகேயன் பெருமிதம்!

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் இப்பொழுது தமிழ் சினிமாவில் உச்சத்தை தொட்ட ஹீரோவாக வலம் வந்து கொண்டுள்ளார்

தமிழைத் தொடர்ந்து தெலுங்கிலும் நேரடியாக அறிமுகமாகும் சிவகார்த்திகேயன் ஜாதி ரத்னாலு பட இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார்

இந்த நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசிய சிவகார்த்திகேயன் தமிழில் ரீமேக் படங்களை பண்ணாத ஹீரோ நான்தான் என பெருமிதத்துடன் கூறியுள்ளார்.

 தெலுங்கில் மார்க்கெட்

தெலுங்கில் மார்க்கெட்

நடிகர் சிவகார்த்திகேயனின் வளர்ச்சி அபாரமானது. தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்து இப்பொழுது தமிழ் சினிமாவில் அனைவரும் ரசிக்கும் மிகச்சிறந்த முன்னணி கதாநாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார். சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவரும் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் மிகப்பெரிய வசூல் சாதனைகளை செய்து வருகிறது இதனால் சிவகார்த்திகேயனுக்கு பல மொழிகளிலும் மார்க்கெட் அதிகரித்து வருகிறது குறிப்பாக சிவகார்த்திகேயன் மார்க்கெட் தெலுங்கில் ரொம்பவே அதிகமாக உள்ளது

 நேரடியாக அறிமுகம்

நேரடியாக அறிமுகம்

அதனால் தமிழைத் தொடர்ந்து இப்போது தெலுங்கிலும் நேரடியாக அறிமுகமாகும் சிவகார்த்திகேயன் ஜாதி ரத்னாலு பட இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகி வர சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் பூஜையுடன் தொடங்கியது மேலும் இந்த படத்தில் உள்ள பிரபல உக்ரைன் நடிகை கதாநாயகியாக ஒப்பந்தம் ஆகியுள்ளார் என கூறப்படுகிறது.

 மீண்டும் பிரியங்கா மோகன் ஜோடியாக

மீண்டும் பிரியங்கா மோகன் ஜோடியாக

தமிழில் டாக்டர் வெற்றியைத் தொடர்ந்து அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டான் திரைப்படத்தில் பிரியங்கா அருள்மோகன் கதாநாயகியாக நடித்து வருகிறார் . டாக்டர் தொடர்ந்து சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் ஜோடி இந்த படத்திலும் இணைவதால் பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது. முழுக்க முழுக்க கல்லூரி கதைக்களத்தில் செம ஜாலியான படமாக உருவாகி வருகிறது

 ரீமேக் படங்களில் நடிக்காத ஹீரோ நான்தான்

ரீமேக் படங்களில் நடிக்காத ஹீரோ நான்தான்

இந்த நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய சிவகார்த்திகேயன் தமிழில் ரீமேக் படங்களில் நடிக்காத ஹீரோ நான்தான் என பெருமிதத்துடன் கூறியுள்ளார். மேலும் சிவகார்த்திகேயனுக்கு பிரேமம், அல வைகுண்டபுரமுலோ மற்றும் சில ஹிந்தி படங்களின் தமிழ் ரீமேக்கில் நடிக்கும் வாய்ப்பு வந்ததாகவும் கடல் போலவே ரீமேக்கிலும் ரசிகர்கள் எதிர்பார்ப்பதை நாம் கொடுப்பது மிகவும் கஷ்டம் என்பதால் அதை எல்லாம் நடிக்காமல் தவிர்த்து விட்டதாகவும் அந்த நேர்காணலில் சிவகார்த்திகேயன் பகிர்ந்துள்ளார்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X