'ஐ ஆம் வெயிட்டிங்': காவியத் தலைவன் சித்தார்த்

By Siva

சென்னை: காவியத் தலைவன் படத்தின் ரிலீஸுக்காக காத்திருப்பதாக படத்தின் ஹீரோ சித்தார்த் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

வசந்தபாலன் இயக்கத்தில் சித்தார்த், பிரித்விராஜ், வேதிகா, நாசர் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் காவியத் தலைவன். படம் வரும் நவம்பர் மாதம் 14ம் தேதி ரிலீஸாக உள்ளது. படம் 1920 மற்றும் 1930களில் தமிழகத்தில் வசித்த நாடக குழுவினரை பற்றியது.

அதனால் படத்தில் வரும் கதாபாத்திரங்கள் பழைய காலத்து ஆட்களை நம் நினைவில் கொண்டு வருவார்கள்.

ஏ.ஆர்.ரஹ்மான்

ஏ.ஆர்.ரஹ்மான்

பழங்காலத்து கதையை சொல்லும் காவியத் தலைவன் படத்திற்கு ஆஸ்கர் மன்னன் ஏ.ஆர். ரஹ்மானின் இசை பக்கபலம்.

கே.பி. சுந்தராம்பாள்

கே.பி. சுந்தராம்பாள்

படத்தில் பிரித்விராஜ் கெட்டவராக நடித்துள்ளார். வேதிகாவின் கதாபாத்திரம் பிரபல பாடகி கே.பி. சுந்தராம்பாளை நமக்கு நினைவூட்டுமாம்.

சித்தார்த்

சித்தார்த்

ஜிகர்தண்டா வெற்றியடைந்த சந்தோஷத்தில் இருக்கும் சித்தார்த் காவியத் தலைவனை பெரிதும் எதிர்பார்க்கிறார்.

காத்திருப்பு

சிறந்த இயர் என்டுக்காக தயாராகிக் கொண்டிருக்கிறேன். காவியத் தலைவன் நவம்பர் 14ம் தேதி உலக அளவில் ரிலீஸாகிறது. எனக்குள் ஒருவனும் ரிலீஸுக்கு தயாராகிறது.
நான் காத்துக் கொண்டிருக்கிறேன் என்று ட்வீட் செய்துள்ளார் சித்தார்த்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X