»   »  அப்பா, தம்பியுடன் இணைந்து நடிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்- சூர்யா

அப்பா, தம்பியுடன் இணைந்து நடிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்- சூர்யா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தந்தை சிவகுமார் தம்பி கார்த்தியுடன் சேர்ந்து நடிக்கக் காத்திருப்பதாக நடிகர் சூர்யா தெரிவித்திருக்கிறார்.

சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான '24' திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து 'எஸ்3' படத்தில் சூர்யா நடித்து வருகிறார்.

I am waiting to star Alongside with my Brother and Father says Surya

இந்நிலையில் தம்பி கார்த்தி, தந்தை சிவகுமாருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்புக்காக நான் காத்திருக்கிறேன் என்று சூர்யா கூறியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் ''ஏற்கனவே 'மனம்' படத்தின் தமிழ் ரீமேக்கில் நாங்கள் மூவரும் இணைந்து நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது.ஆனால் ஒரு ரீமேக் படத்தில் நடிப்பதை விட புதிய கதையில் நடித்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.

ஏனெனில் நாங்கள் மூவரும் இணைந்து நடிக்கும் படம் எனது வாழ்வில் மறக்க முடியாத படமாக இருக்கும்'' என்று கூறியிருக்கிறார்.

'சிங்கம்', 'சிங்கம் 2' வெற்றியைத் தொடர்ந்து அதன் 3 வது பாகமான 'எஸ் 3' படத்தில் சூர்யா தற்போது நடித்து வருகிறார்.இதனைத் தொடர்ந்து 'கபாலி' ரஞ்சித்தின் இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

English summary
'I am Waiting to star Alongside with my Brother and Father' actor Surya said.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil