twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மாரியில் ரோபோ ஷங்கர் வேண்டாம் என்று ஒத்த காலில் நின்றேன்: தனுஷ்

    By Siva
    |

    Recommended Video

    மாரி படத்தில் ரோபோ ஷங்கர் வேண்டாம் என கூறிய தனுஷ்- வீடியோ

    சென்னை: மாரி படத்தில் ரோபோ ஷங்கர் வேண்டாம் என்று ஒற்றை காலில் நின்றதாக தனுஷ் தெரிவித்துள்ளார்.

    பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய் பல்லவி, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ள மாரி 2 படம் வரும் 21ம் தேதி ரிலீஸாகிறது. இந்நிலையில் படக்குழு இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசியது.

    நிகழ்ச்சியில் தனுஷ் பேசியதாவது,

    ரோபோ ஷங்கர்

    ரோபோ ஷங்கர்

    மாரி 2 படத்தில் நீங்கள் 2 பேரை அடித்துக் கொண்டே இருப்பீர்கள் என்றார் இயக்குனர். ரோபோ ஷங்கர் சைஸ் என்ன, என் சைஸ் என்ன நான் எப்படி அவரை அடித்துக் கொண்டே இருப்பது. திரையில் பார்ப்பவர்கள் நம்ப வேண்டுமே என்றேன். மாரி படத்தில் ரோபோ ஷங்கர் வேண்டாம் என்று நான் ஒத்தக் காலில் நின்றேன். அது தான் உண்மை.

    இயக்குனர்

    இயக்குனர்

    நம்ம அடித்தால் வாங்குகிற மாதிரி சைஸில் ஒரு ஆளை பாருங்கள் என்றேன். ஆனால் பாலாஜி முடியாது என்று கூறிவிட்டார். ரோபோவையே அடிங்க எல்லாம் சரியாக வரும் என்றார். இதனால் நான் தனியாக ஹோம்ஒர்க் பண்ணினேன். அவ்வளவு பெரிய உருவத்தை நம்பும்படி எப்படி அடிப்பது என்று ஹோம்வொர்க் செய்தேன். மாரி முதல் பாகம் தான் ரொம்ப கஷ்டம்.

    ஹேப்பி

    ஹேப்பி

    நான் மாரியாக இருக்கும்போது தான் ஹேப்பியாக இருந்தேன். ஏன் என்றால், நிஜ வாழ்க்கையில் நம்மை நிறைய பேர் சீண்டிக் கொண்டே இருப்பார்கள். ஒன்னுமே செய்ய முடியாது. பல்லைக் கடித்துக் கொண்டு போக வேண்டியது தான். ஆனால் மாரியாக இருக்கும்போது கூப்பிட்டு நாலு தட்டு தட்டலாம்.

    வினோத்

    வினோத்

    நிஜத்தில் நம்மை யார் கடுப்பேற்றினார்கள் என்று யோசித்து அவர்களை கூப்பிட்டு தட்டு தட்டுவேன். நமக்கு அடிதாங்கி என்று ஒரு கேரக்டர் இருக்கு. அந்த கேர்கடர் வினோத். மாரியாக இருந்தால் ஜாலியாக இருக்கலாம், வாழ்க்கையே ஹேப்பியாக இருக்கும். மாரிக்கு விதிமுறைகளே இல்லை. மாரி கதாபாத்திரத்தில் இருந்து வெளியே வர விரும்பவில்லை என்றார் தனுஷ்.

    English summary
    Dhanush said that he asked Maari director Balaji Mohan not to cast Robo Shankar in the movie.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X