»   »  தனுஷ் எந்த உயரத்தை தொட்டாலும் எனக்கு கவலையில்லை: சிம்பு

தனுஷ் எந்த உயரத்தை தொட்டாலும் எனக்கு கவலையில்லை: சிம்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தனுஷ் எவ்வளவு பெரிய உயரத்தை தொட்டிருந்தாலும் தனக்கு கவலை இல்லை என நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார்.

நடிகர்கள் தனுஷும், சிம்புவும் ஒரு காலத்தில் எலியும், பூனையுமாக இருந்தனர். அதன் பிறகு ஒருவரையொருவர் பார்த்தால் சிரிக்கும் அளவுக்கு வந்தனர். பின்னர் கட்டிப்பிடித்து நண்பர்கள் ஆகினர்.

சிம்புவுக்கு 30 வயதானபோது தனுஷ் வாழ்த்தி 30களுக்கு வரவேற்றார். அதன் பிறகு அவர்களிடையே என்ன நடக்கிறது என்பதை யாராலும் யூகிக்க க் கூட முடியவில்லை.

கவலையில்லை

கவலையில்லை

தனுஷின் வெற்றி மற்றும் அவர் அடைந்துள்ள உயரத்தை பற்றி எனக்கு கவலை இல்லை. நான் அவரின் வளர்ச்சியை பார்த்து கவலைப்படுவதற்கு பதில் என் கெரியரில் கவனம் செலுத்த விரும்புகிறேன் என்கிறார் சிம்பு.

தனுஷ்

தனுஷ்

தனுஷ் என்னை விட வளர்ந்துவிட்டதை பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன். நான் தற்போது அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் கவனம் செலுத்தி வருகிறேன் என்று சிம்பு தெரிவித்துள்ளார்.

சிம்பு

சிம்பு

அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் சிம்பு மூன்று வித்தியாசமான கதாபாத்திரங்களில் வருகிறார். ஏற்கனவே மதுரை மைக்கேலை பார்த்தாகிவிட்டது. அடுத்து அஷ்வின் தாத்தா ட்ரெய்லர் வருகிறதாம்.

கொடி

கொடி

தனுஷ், த்ரிஷா நடித்துள்ள கொடி தீபாவளிக்கு ரிலீஸாகிறது. அரசியலை கையில் எடுத்துள்ள தனுஷ் இந்த படம் மூலம் இளைஞர்களுக்கு அறிவுரை வழங்குகிறாராம்.

English summary
Actor Simbu said that he doesn't care about Dhanush's great growth in the film industry.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil