twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கோடிக்கணக்கான சொத்து இருந்தும், இவரும் "தவ" வாழ்க்கைதான் வாழுறாராம்!

    |

    மும்பை: கோடிக்கணக்கான சொத்துக்கள் இருந்தும், தான் சன்னியாசியாகவே வாழ்வதாக நடிகர் ஷாரூக்கான் தெரிவித்துள்ளார்.

    கடந்த சில நாட்களாக தவ வாழ்க்கை, தவ புண்ணியம், தவ வரம் போன்ற வார்த்தைகள் விடாமல், தமிழக வாக்காளர்களைத் துரத்திக் கொண்டேயிருக்கிறது. பிரபல கட்சித் தலைவர்கள் மாற்றி மாற்றி தங்களது நிலைமை குறித்து இவ்வாறு பேசி வருகின்றனர். இந்நிலையில், விமானம் ஏறி இந்த வார்த்தை மும்பைக்கும் சென்று விட்டது போல.

    இந்திப்பட சூப்பர் ஸ்டாரான ஷாரூக்கான், கோடிக்கணக்கில் பணம் இருந்தும் தான் சன்னியாசி போன்று வாழ்வதாக பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து மேலும் அவர் கூறியிருப்பதாவது:-

    கோடிக்கணக்கில் சம்பாத்தியம்...

    கோடிக்கணக்கில் சம்பாத்தியம்...

    நான் இருபது ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் இருக்கிறேன். இந்தி பட உலகில் முன்னணி கதாநாயகனாக உயர்ந்து கோடிக்கணக்கில் சம்பாதித்து வைத்துள்ளேன். காலை எடுத்து வெளியே வைத்தாலே நான் பயணிக்க விலை உயர்ந்த கார்கள் நிற்கின்றன.

    ஆடம்பர வாழ்க்கை...

    ஆடம்பர வாழ்க்கை...

    வெளியூர்களுக்கு சென்றால் தங்குவதற்கு நட்சத்திர ஓட்டல்கள் ஆடம்பரமான மாட மாளிகைகள் இருக்கின்றன. ஆனால் இவற்றில் எல்லாம் எனது மனம் ஈடுபாடு காட்டுவது இல்லை.

    சன்னியாசி...

    சன்னியாசி...

    எல்லாம் இருந்தும் சன்னியாசி நிலையிலேயே இருக்கிறேன். எனக்கு சொந்தமாக எந்த ஆசையும் கிடையாது. எனக்கு என்று எதையும் வாங்கவும் மாட்டேன்.

    கொண்டாட்டம் இல்லை...

    கொண்டாட்டம் இல்லை...

    ஒரே ‘பேன்ட்'டில் ஒரு வாரம் கூட இருப்பேன். ஓட்டல்களில் சாப்பிட மாட்டேன். வீட்டில் ஒரே மாதிரியான உணவையே சாப்பிடுகிறேன்.

    கொண்டாட்டம் இல்லை...

    கொண்டாட்டம் இல்லை...

    சினிமா தயாரிக்கும் போதுதான் எனது சொந்த பணத்தை செலவிடுகிறேன். நான் நடித்த படங்கள் வெற்றிகரமாக ஓடினால் கூட அதை கொண்டாட மாட்டேன். நான் ஒரு விதமான சன்னியாசிதான். என் குழந்தைகள் ஆசைப்பட்டதை வாங்கி கொடுப்பேன்.

    அந்தநாள் ஞாபகங்கள்...

    அந்தநாள் ஞாபகங்கள்...

    பெரிய நடிகர், தயாரிப்பு கம்பெனியின் முதலாளி, ஐ.பி.எல் கிரிக்கெட் அணியின் உரிமையாளர், ஸ்டூடியோ அதிபர், வெளிநாட்டு தொழில்களில் பங்குதாரர் என்றெல்லாம் எனது தகுதி இப்போது உயர்ந்து இருக்கலாம். ஆனால் சிறு வயது வாழ்க்கையை இன்னும் மறக்கவில்லை. நடுத்தர குடும்பத்தில் பிறந்தேன். டெல்லியில் இருந்து பெற்றோரை பிரிந்து கையில் காசு இல்லாமல் மும்பை வந்த அந்த நாட்களை இன்னும் நான் மறக்கவில்லை.

    முற்றுப்புள்ளி...

    முற்றுப்புள்ளி...

    எல்லோருடைய தொழிலிலும் ஒரு நாள் முற்றுப்புள்ளி வரும். எல்லோரும் இப்போது இருப்பதுபோல் கடைசி வரை இருப்பது இல்லை. எப்படி இருந்தாலும் புதிது புதிதாய் சாதிக்க வேண்டும் என்ற எண்ணமும் வேகமும் எனக்கு உண்டு. அதனால்தான் நிறைய தொழில்களில் ஈடுபடுகிறேன்'' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    English summary
    Superstar Shah Rukh Khan has been ruling Bollywood for the last two-decades but he says he doesn’t celebrate success and loves fulfilling desires of his children.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X