அந்தக் காரை இப்போ யார் வெச்சுருக்கா?.. திரிஷா - விஜய்யை விமல் இப்படி பேசிட்டாரே.. ஓவர் அடி
சென்னை: விஜய்யிடமிருந்து தனக்கு விவாகரத்து வேண்டுமென்றும், நீலாங்கரை வீட்டில் தன்னை அனுமதிக்க விஜய்க்கு உத்தரவிட வேண்டும் என்றும் இரண்டு மனுக்களை தாக்கல் செய்திருக்கிறார் அவரது மனைவி. விஜய்யோ திரிஷாவுடன் ஜோடியாக திருமணத்துக்கு வந்தார்; மேலும் இதெல்லாம் வொர்த்தே இல்லை என அலட்சியமாக நேற்றைய கூட்டத்திலும் பேசி அதிருப்தியை சம்பாதித்துக்கொண்டார். இந்நிலையில் விஜய் - திரிஷா விவகாரம் பற்றி நடிகர் விமல் பேசியிருப்பது ட்ரெண்டாகியுள்ளது.
விஜய் - சங்கீதா - திரிஷா பற்றிய பேச்சுத்தான் எங்கும் ஓடிக்கொண்டிருக்கிறது. முதலில் விவாகரத்து மனுத்தாக்கல் செய்த அவர்; ஏகப்பட்ட குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார். அதற்கெல்லாம் எதுவும் பதில் சொல்லாமல் சைலெண்ட்டாக இருந்தார். ஆனால் திடீரென நடிகை திரிஷாவுடன் ஒரு திருமணத்துக்கு ஜோடி போட்டு வந்தார். ஏற்கனவே சங்கீதா குறிப்பிடும் நடிகை திரிஷாதான் என பலர் சந்தேகப்பட்ட சூழலில் அவர் இப்படி செய்தது மேற்கொண்டு கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

புதிய மனு: தொடர்ந்து சங்கீதா இன்னொரு மனுவையும் தாக்கல் செய்திருந்தர். அதில், 'விஜய்யுடன் 26 ஆண்டுகள் குடும்பம் நடத்தி இரண்டு குழந்தைகளை பெற்று வளர்த்திருக்கிறேன். குழந்தைகளையும், விஜய்யையும் சிறப்பாகவே கவனித்துக்கொண்டேன். அவரது அரசியல் சூழல் கருதி பலமுறை சுமூகமாக விவாகரத்து பெற முயற்சி செய்தும் பிரிந்து செல்ல மறுக்கிறார். விவாகரத்து மனு தாக்கல் செய்தால் வீட்டுக்குள் அனுமதிக்க மாட்டேன் என்று கூறினார். பிரிட்டன் குடியுரிமை இருக்கும் எனக்கு சென்னையில் தனியாக வீடு இல்லை. விவாகரத்து கிடைக்கும் வரை விஜய் வீட்டில் வசிக்க எனக்கு உரிமை இருக்கிறது. அந்த வீட்டில் நான் தங்க விஜய் அனுமதிக்க உத்தரவிட வேண்டும்'என தெரிவித்திருந்தார்.
அலட்சியப்படுத்திய விஜய்: திரிஷாவை அழைத்து வந்ததும், சங்கீதாவை வீட்டுக்குள் விட மறுத்ததும் அவரது இமேஜை மேலும் மேலும் சேதாரம் ஆக்கியது. நிலைமை இப்படி இருக்க நேற்று நடந்த தவெக கூட்டத்தில், 'சமீபத்தில் ஓடிக்கொண்டிருக்கும் பிரச்னைகளை நான் பார்த்துக்கொள்கிறேன். நீங்கள் ஃபீல் செய்யாதீர்கள். அதெல்லாம் அவ்வளவு வொர்த் இல்லை' என அலட்சியமாக பேசினார். இதுவும் சோஷியல் மீடியாவில் கடும் கண்டங்களை சம்பாதித்திருக்கிறது.
கிழித்த சமுத்திரகனி: அதுமட்டுமின்றி திரைத்துறையிலுமே அவருக்கு எதிரான மனப்பான்மையில்தான் பலரும் இருக்கிறார்கள். இயக்குநரும், நடிகருமான சமுத்திரகனிகூட இயக்குநர்கள் பாலாவிடமும், ஆர்.வி.உதயகுமாரிடமும், 'இது என்ன விளையாட்டா?. இவ்வளவு விஷயம் நடந்திருக்கிறது. நீ அவங்களை வெளியே கூட்டிட்டு போற. நான்கு சுவற்றுக்குள் வைத்துக்கொள்ள வேண்டியதுதானே. யாரை நீ பழி வாங்குற. எதற்காக இந்த போஸ். அனைத்தும் நன்றாக வந்துகொண்டிருந்தது. இனிமேல் நம்மால் முட்டு கொடுக்க முடியாது என கட்சிக்காரனே சொல்கிறான்" என்று திட்டி தீர்த்திருந்தார்.
விமலின் அட்டாக்: இந்நிலையில் விஜய் - திரிஷா விவகாரம் பற்றி நடிகர் விமலிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதிலளித்த அவர், "அந்தக் காரை இப்போ வெச்சுருக்கா. திரைத்துறையில் நான் இருப்பதால் அந்தக் காரை இப்போ யார் ஓட்டிக்கொண்டிருக்கிறார் என்றெல்லாம் எனக்கு தெரியாது. அரசியலுக்கு விஜய் வந்திருப்பதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்களோ அப்படித்தான் பார்க்கிறேன்" என்றார். அவரது இந்த பதில் சோஷியல் மீடியாவில் கவனத்தை ஈர்த்திருக்கிறது.


Click it and Unblock the Notifications















