»   »  மக்கள் ஆதரவு இருப்பதால் எனக்கு சமூக வலைத் தளங்கள் தேவையில்லை - சிம்பு

மக்கள் ஆதரவு இருப்பதால் எனக்கு சமூக வலைத் தளங்கள் தேவையில்லை - சிம்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மக்களின் ஆதரவு இருப்பதால் எனக்கு இனி சமூக வலைத் தளங்கள் தேவை இல்லை என்று நடிகர் சிம்பு கூறியுள்ளார்.

ட்விட்டரில் பரபரப்பாக இயங்கி வந்தவர் நடிகர் சிம்பு. அவருக்கு ஃபாலோயர்களும் அதிகம்.

ஆனால் அவரது பதிவுகளுக்கு ஆதரவை விட கிண்டலும் கேலியும் எதிர்மறைக் கருத்துகளுமே அதிகம் கிடைத்தன.

I don't need social media - Simbu

எப்போதும் எதிர்மறையாகவே இருக்கும் இந்த சமூக வலைத் தளவாசிகளுடன் இனி இருப்பது அவசியமற்றது என்று கூறிய சிம்பு, நேற்று ட்விட்டரிலிருந்து வெளியேறினார்.

இதுகுறித்து இன்று அவர் கூறுகையில், "மக்கள் ஆதரவு எனக்கு இருப்பதால் இனி சமூக வலைத் தளங்கள் தேவையில்லை. விமர்சனங்களைக் கண்டு ஓடி ஒளியவில்லை.

சமூக வலைத் தளங்களில் நடக்கும் சூழ்ச்சி எனக்கு வருத்தத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியதால் வெளியேறினேன்.

எனக்கு தமிழன் என்ற அடையாளம் போதும்," என்றார்.

English summary
Actor Simbu says that he don't need social media any more

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil