'மாஸ்க் அணிந்தபடி கல்யாணம் பண்ண விருப்பம் இல்லை..' துபாய் திருமணத்தைத் தள்ளி வைத்த ஹீரோ விளக்கம்!

By

ஐதராபாத்: மாஸ்க் அணிந்துகொண்டு திருமணம் செய்ய வேண்டாம் என்பதால் அதை தள்ளி வைத்ததாகத் தெரிவித்துள்ளார், ஹீரோ.

Recommended Video

இந்த Year திருமணம் | Actor Krishna Second Marriage with Sunaina

பிரபல தெலுங்கு ஹீரோ நிதின். தெலுங்கு தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தரான சுதாகர் ரெட்டியின் மகன். இவர், ஜெயம் படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.

இந்தப் படத்தில்தான் கோபிசந்த் வில்லனாக அறிமுகமானார். படம் ஹிட்டானது. இது தமிழில் ரவி நடிப்பில் ஜெயம் என்ற பெயரிலேயே ரீமேக் ஆகி சூப்பர் ஹிட்டானது.

ராஷ்மிகா மந்தனா

ராஷ்மிகா மந்தனா

தெலுங்கில் பல ஹிட் படங்களில் நடித்துள்ள நிதின், ராம்கோபால் வர்மா இயக்கிய அக்யுத் படம் மூலம் இந்திக்கும் சென்றார். இப்போது வெங்கு குடுமுலா இயக்கிய பீஷ்மா என்ற காமெடி படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் பிப்ரவரி மாதம் ரிலீஸ் ஆகி வெற்றி பெற்றது. இதில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்தார். அடுத்து ரங்க் தே உட்பட சில படங்களில் நடித்து வருகிறார்.

நிச்சயதார்த்தம்

நிச்சயதார்த்தம்

சில படங்களை தயாரித்தும் உள்ள நிதின், பாடல்களும் பாடியுள்ளார். இவர் ஷாலினி என்பவரை சில வருடங்களாகக் காதலித்து வந்தார். இவர்கள் காதலுக்கு இரண்டு குடும்பத்தினரும் சம்மதம் தெரிவித்ததை அடுத்து கடந்த மாதம், ஐதராபாத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இதில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்டனர்.

துபாயில் திருமணம்

துபாயில் திருமணம்

இவர்கள் திருமணத்தை வரும் 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் துபாயில் நடத்த திட்டமிட்டிருந்தனர். இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் இந்தத் திட்டத்தை முறித்துவிட்டது. கொரோனாவால் உலகம் முழவதும் பாதிக்கப்பட்டுள்ளது. விமான போக்குவரத்து முதல் உள்ளூர் போக்குவரத்து வரை துண்டிக்கப்பட்டுள்ளது.

திட்டம் ரத்து

திட்டம் ரத்து

இந்தியாவில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். இந்த ஊரடங்கை சில மாநிலங்கள் இன்னும் நீடித்துள்ளன. மற்ற மாநிலங்களிலும் நீட்டிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் நிதின் மாஸ்க் அணிந்து கொன்டு திருமணம் செய்துகொள்ள விருப்பம் இல்லை என்பதால் திருமணத்தை தள்ளி வைத்ததாகத் தெரிவித்துள்ளார்.

உயிர் முக்கியம்

உயிர் முக்கியம்

அவர் மேலும் கூறும்போது, லாக் டவுன் அறிவித்தபோதே திருமணத்தை தள்ளி வைக்க முடிவு செய்தோம். இதற்கு எனது குடும்பத்தினரும் ஷாலினி குடும்பத்தினரும் ஒப்புக்கொண்டனர். ஒவ்வொருவர் வாழ்விலும் திருமணம் முக்கியமான நிகழ்ச்சி. அதைவிட முக்கியம் ஒவ்வொருவரின் உயிரும். அதனால் தள்ளி வைத்தோம்' என்று தெரிவித்துள்ளார் நிதின்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X