விஜய்யுடன் எனக்குப் போட்டியில்லை.. - விஷால்

By Shankar

திருச்சி: விஜய்யுடன் எனக்குப் போட்டியில்ல. கத்திக்குப் போட்டியாக பூஜையை நான் வெளியிடவில்லை. படத்தை ஆரம்பித்த நாளிலேயே பூஜை தீபாவளி ரிலீஸ் என்று அறிவித்துவிட்டுத்தான் தொடங்கினேன், என்கிறார் நடிகர் விஷால்.

தீபாவளிக்கு வெளியான விஷாலின் பூஜை படம் நல்ல வசூலுடன் தமிழகமெங்கும் ஓடிக் கொண்டுள்ளது.

நடிகர் விஷால் அனைத்து நகரங்களுக்கும் சென்று ரசிகர்களைச் சந்தித்து, இந்த வெற்றிக்கு நன்றி தெரிவித்து வருகிறார்.

‘பூஜை' படம் திருச்சி கலையரங்கம், எல்.ஏ.(மாரீஸ்) தியேட்டர்களில் ஓடுகிறது. இந்த அரங்குகளில் ரசிகர்கள் மத்தியில் நடிகர் விஷால் தோன்றினார்.

சந்திப்பு

சந்திப்பு

அதற்கு முன் திருச்சியில் நிருபர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், "இயக்குனர் ஹரி இயக்கத்தில் நான் நடித்து தீபாவளிக்கு வெளியான ‘பூஜை' படம் எனது சினிமா வாழ்க்கையில் முக்கியமான ஒன்று.

நல்ல வரவேற்பு

நல்ல வரவேற்பு

தமிழ், தெலுங்கில் 1200 தியேட்டர்களில் ‘பூஜை' படம் வெளியாகி மக்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஊர் ஊராக

ஊர் ஊராக

எனது தயாரிப்பில் வெளியான இந்த படத்தை வெற்றி பெறச் செய்த ரசிகர்களுக்கு ஸ்டுடியோவில் உட்கார்ந்து கொண்டு நன்றி சொல்ல எனக்கு விருப்பம் இல்லை. நேரில் நன்றி சொல்ல வேண்டும் என்பதற்காக ரசிகர்களை ஊர் ஊராக சென்று சந்தித்து வருகிறேன்.

அடுத்தும் ஹரி இயக்கத்தில்

அடுத்தும் ஹரி இயக்கத்தில்

‘பூஜை' படம் குடும்ப கதையம்சம், சென்டிமெண்ட், நகைச்சுவை, சண்டை, என அனைத்து அம்சங்களும் நிறைந்த படம். குடும்பம், குடும்பமாக வந்து மக்கள் ரசிக்கிறார்கள் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அடுத்தும் டைரக்டர் ஹரி இயக்கத்தில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன்.

பஞ்ச் வேண்டாம்

பஞ்ச் வேண்டாம்

சரித்திர படங்களில் நடிக்க எனக்கு விருப்பம் இல்லை. எனக்கு சாதாரணமான படங்களிலேயே வசனங்களை பேசுவதில் சிரமம் இருக்கும். சரித்திர படங்களில் வசனங்களைப் பேசுவது அதிக சிரமமாக இருக்கும். அதே போன்று பஞ்ச் டயலாக்குகளை படங்களில் பேசுவதும் எனக்குப் பிடிக்காது.

விஜய்யுடன்

விஜய்யுடன்

நடிகர் விஜய்யுடன் எனக்கு போட்டி இல்லை. ‘பூஜை' படம் சூட்டிங் தொடங்கிய முன்பே தீபாவளிக்கு தான் ரீலிஸ் என்று தேதியை முடிவு செய்து விட்டு படப்பிடிப்பை தொடங்கினோம். ‘கத்தி' படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என்று எனக்கு தெரியாது. இது தற்செயலாக நடந்தது.

லட்சுமி மேனன்

லட்சுமி மேனன்

நடிகை லட்சுமிமேனன் என்னுடன் நடிக்க விருப்பம் தெரிவித்திருப்பதில் மகிழ்ச்சி. அவர் சிறந்த நடிகை. மற்றவர்களை ஊக்கப்படுத்துவார். நடிகர் சங்கத்தை கைப்பற்றும் எண்ணம் எனக்குக் கிடையாது. சங்கத்தை சிறப்பான வழியில் நடத்த அனைவரும் முன்னிற்க வேண்டும் என்று விரும்புகிறேன்," என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X