ஓ மை மர்யம் ஐ ரியலி மிஸ் யு…. மகளுக்காக உருகும் துல்கர் சல்மான்
சென்னை: பிஸியான நடிப்பில் இருக்கும் துல்கர் சல்மான் தனது மனைவி குழந்தைகளை மிஸ் செய்வதாக கூறியுள்ளார். தற்போது தமிழ், மலையாளம் மற்றும் இந்தி என தொடர்ச்சியாக படங்களில் நடித்து வருவதால் தன்னுடைய 2 வயது பெண் குழந்தை, மனைவியுடன் நேரத்தை செலவிட முடிவதில்லை. தனது மனைவி குழந்தைகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு அவர்கள் மேல் இருக்கும் அன்பையும், காதலையும் வெளிப்படுத்தியுள்ளார்.
மலையாள திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவரும் நடிகர் மம்முட்டியின் மகனுமான துல்கர் சல்மான் இப்போது படு பிஸியாக இருக்கிறார். மலையாள படங்களில் ரசிகர்களை கவர்ந்தவர். தமிழ், தெலுங்கு மட்டுமின்றி இப்பொழுது ஹிந்தி திரைப்படங்களிலும் கலக்கி வருகிறார்.

2011ஆம் ஆண்டில் வெளியான செகண்ட் ஷோ எனும் மலையாள திரைப்படம் மூலம் தென்னிந்திய திரையுலகிற்குள் அறிமுகமானவர். தமிழ் சினிமாவில் வாயை மூடி பேசவும் படம் மூலம் அறிமுகமானார். பிறகு ஓ காதல் கண்மணியே, நடிகையர் திலகம் போன்ற படங்களின் மூலம் மிகவும் பிரபலமானவர்.
2018ஆம் ஆண்டில் கர்வான் திரைப்படம் மூலம் பாலிவுட்டிலும் கால் பதித்தார். அதைத் தொடர்ந்து, தற்போது அபிஷேக் சர்மா இயக்கத்தில் ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் தி ஜோயா ஃபாக்டர் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். சோனம் கபூர் இவ்வருடம் ஜோடி சேர்கிறார்.
மும்பையில் படு பிஸியாக விளம்பரங்களில் ஈடுபட்டு வரும் துல்கர் சல்மான் தனது குடும்பத்தை மிகவும் மிஸ் செய்வதாக ஃபீல் பண்ணுகிறார். துல்கர் சல்மான் அமல் சுஃபியா எனும் கட்டிடக்கலை நிபுணரை கடந்த 2011ஆம் ஆண்டு டிசம்பர் 22ஆம் தேதியன்று மணந்தார்.
தற்போது, அந்த தம்பதியினருக்கு மர்யம் எனும் பெண் குழந்தை உள்ளது. தன் 2 வயது பெண் குழந்தை மற்றும் அவரது மனைவியை மிகவும் மிஸ் செய்வதாகவும் அவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு அவர்கள் மேல் இருக்கும் அன்பையும், காதலையும் வெளிப்படுத்தியுள்ளார்.
துல்கர் சல்மான் தற்போது கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், வான் போன்ற தமிழ் படங்களிலும், குருப் என்னும் மலையாளப்படங்களிலும், தி ஜோயா ஃபாக்டர் எனும் இந்தி படத்திலும் நடித்து வருவதால் மிகவும் பிஸியாக பறந்து கொண்டிருக்கிறார் இந்த ஸ்டார் ஹீரோ.
இந்தியில் அவர் நடிக்கும் தி ஜோயா ஃபாக்டர் திரைப்படம் செப்டம்பர் 20ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்துள்ளனர் படக்குழுவினர்.


Click it and Unblock the Notifications











