twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    என்ன ரொம்ப கிண்டல் பண்ணாங்க.. Relatives - னால ஈஸியா சினிமாவுக்கு வந்துட்டேன்னு!

    |

    சென்னை : இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இப்போது ஹீரோவாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார் ஜிவி பிரகாஷ் குமார்

    சமீபத்தில் வெளியான செல்ஃபி படத்தில் ஆக்சன் ஹீரோ அவதாரம் எடுத்து பட்டையைக் கிளப்பியுள்ளார்

    என்னதான் வெற்றிகரமான இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வலம் வந்து கொண்டிருந்தாலும் Relatives - னால தான் சினிமாவுக்கு வந்தேன்னு பலரும் கிண்டல் செய்தனர்.

    தளபதி 66.. அந்த தாறுமாறான அப்டேட்டும் வந்தாச்சு.. விஜய் ரசிகர்களுக்கு கிடைத்த ரெண்டாவது லட்டு!தளபதி 66.. அந்த தாறுமாறான அப்டேட்டும் வந்தாச்சு.. விஜய் ரசிகர்களுக்கு கிடைத்த ரெண்டாவது லட்டு!

    இசை அசுரன்

    இசை அசுரன்

    இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர் என பல அவதாரங்களை கொண்டுள்ள ஜிவி பிரகாஷ் குமார் இசையில் வெளியாகும் பல திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படத்தில் ஜிவி பிரகாஷின் இசை அனைவராலும் பாராட்டப்பட்டது.

    சவாலாக ஏற்றுக்கொண்டு நடிப்பிலும்

    சவாலாக ஏற்றுக்கொண்டு நடிப்பிலும்

    டார்லிங் படத்தில் ஹீரோவாக நடித்ததன் மூலம் நடிகராக அறிமுகமான ஜிவி பிரகாஷுக்கு ஆரம்பத்தில் பலரும் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஜிவி பிரகாஷ் நடிப்பை பலரும் கிண்டல் செய்தனர். இந்த நிலையில் ஒவ்வொரு படத்தையும் சவாலாக ஏற்றுக்கொண்டு நடிப்பிலும் தன்னை படத்திற்கு படம் வித்தியாசப்படுத்தி வரும் ஜிவி பிரகாஷ் நாச்சியார், ஜெயில்,பேச்சுலர், சிவப்பு மஞ்சள் பச்சை என வித்தியாச வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து வருகிறார்

    ஆக்ஷன் ஹீரோ அவதாரம்

    ஆக்ஷன் ஹீரோ அவதாரம்

    இதுவரை நார்மல் ரோல்களில் நடித்து வந்த ஜிவி பிரகாஷ் குமார் முதல் முறையாக ஆக்ஷன் ஹீரோ அவதாரம் எடுத்துள்ள படம் செல்ஃபி. வெற்றிமாறனின் உதவியாளர் இயக்குனர் மதிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் கௌதம் வாசுதேவ் மேனன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான செல்ஃபி ரசிகர்கள் மத்தியில் அமோக ஆதரவை பெற்றுள்ளது. முன்னணி நடிகர்களுக்கு இணையாக ஒரு டஜன் படங்களில் நடித்து வரும் ஜிவி பிரகாஷ் அதேசமயம் பல படங்களுக்கு இசையமைத்தும் வருகிறார். தமிழைத் தொடர்ந்து இப்போது தெலுங்கு,பாலிவுட்டில் அடுத்தடுத்து இரண்டு முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

    ஈஸியா சினிமாவுக்கு வந்துட்டேன்

    ஈஸியா சினிமாவுக்கு வந்துட்டேன்

    இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பேசிய ஜிவி பிரகாஷ் குமார் தான் திரைத்துறையில் அறிமுகமாகும் போது பலரும் என்னை கிண்டல் செய்தார்கள். என்னுடைய திறமையை பார்க்காமல் Relatives - னால நான் ஈஸியா சினிமாவுக்கு வந்துவிட்டேன் என பலரும் கூறினார்கள் ஆனால் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் என்னுடைய வேலையில் மட்டும் முழு மூச்சாக பணியாற்றினேன் இப்பொழுது என்னை பற்றி நெகட்டிவ்வாக பேசியவர்களே என்னுடைய நடிப்பைப் பார்த்து பாராட்டுகின்றனர் எனக் கூறியுள்ளார்.

    English summary
    I got a easy chance in cinema with the help of my relatives Gv prakash tells the Teasing Moments
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X