நான் மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டவன்... மகேஷ்பாபு ஓபன் டாக்
ஐதராபாத் : டோலிவுட்டின் மிகச்சிறந்த ஹீரோவாக மகேஷ் பாபு உள்ளார்.
அவர் தான் மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டவன் என்று சமீபத்திய பேட்டியொன்றில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஆரம்ப காலத்திலிருந்தே தன்னுடைய ஸ்கிரிப்டுகளை தானே தேர்வு செய்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

டோலிவுட் சூப்பர் ஸ்டார்
டோலிவுட்டின் சூப்பர் ஸ்டாராக விளங்கி வருபவர் மகேஷ் பாபு. இவர் முன்னாள் ஹீரோ கிருஷ்ணாவின் மகன். தன்னுடைய தேர்ந்தெடுத்த படங்களின்மூலம் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளார். நடிப்பை தாண்டி பல்வேறு சமூக பணிகளிலும் இவர் ஈடுபட்டு வருகிறார்.

சமூக பணிகளில் ஆர்வம்
சமீபத்தில் தனது தந்தை மற்றும் மகள் பிறந்தநாளில் ஒரு கிராமத்திற்கே கொரோனா தடுப்பூசிகளை இலவசமாக வழங்கி ரசிகர்களின் விருப்பத்திற்குரியவரானார். மேலும் ஹீல் எ சைல்ட் என்ற தொண்டு நிறுவனத்துடன் இணைந்து பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.

ரசிகர்கள் கொண்டாட்டம்
ஆரம்ப காலத்திலிருந்தே இவரது படங்கள் அனைத்தும் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகின்றனர். இவரை தனது சூப்பர் ஹீரோவாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் தான் மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டவன் என்று சமீபத்திய பேட்டியொன்றில் மகேஷ் பாபு குறிப்பிட்டுள்ளார்.

ஸ்கிரிப்டுகளை நேரடியாக தேர்வு
மேலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு படத்திற்கு படம் அதிகரித்து வரும் நிலையில் அதை காப்பாற்றுவது மிகுந்த சவால் நிறைந்தது என்று மகேஷ் பாபு குறிப்பிட்டுள்ளார். இதற்கென தன்னுடைய ஸ்கிரிப்டுகளை ஆரம்ப காலத்திலிருந்தே தானே தேர்ந்தெடுத்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

ட்விட்டரில் பரபரப்பு
மகேஷ் பாபு தொடர்ந்து ட்விட்டர் பக்கத்திலும் பரபரப்புடன் செயல்பட்டு வருகிறார். தன்னுடைய அடுத்தடுத்த படங்கள், வீடியோக்கள் உள்ளிட்டவற்றை அவர் தொடர்ந்து பதிவிட்டு தன்னுடைய ரசிகர்களுடன் நேரடி தொடர்பில் இருக்கிறார். கொரோனா காலத்தில் இவர் பதிவிட்ட வீடியோக்கள் வைரலானது.


Click it and Unblock the Notifications











