நான் 8-வது படிக்கும் போதே லவ் லெட்டர் கொடுத்தேன்...பலருக்கு 8ஆம் வகுப்பு தான் ஸ்பெஷல்

சென்னை: நடிகர் ஜீவா கலகலப்பு 2 வெற்றியை தொடர்ந்து மீண்டும் சுந்தர்.சி இயக்கத்தில் புதிய படத்தில் இணைந்து ஹீரோவாக நடித்து வருகிறார்

தமிழைத் தொடர்ந்து பாலிவுட் செல்லும் ஜீவா 83 என்ற படத்தின் மூலம் இந்தி ரசிகர்களுக்கும் பரிச்சயமாகி உள்ளார்

படங்களில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் மிகவும் எதார்த்தமாக பேசக்கூடிய ஜீவா தான் 8ம் வகுப்பு படிக்கும்போது லவ் லெட்டர் கொடுத்ததாக மிகவும் ஓபனாக பேசியுள்ளார்

வித்தியாசமான ரோல்களில்

வித்தியாசமான ரோல்களில்

தமிழ் சினிமாவில் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவராக உள்ள நடிகர் ஜீவா எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை கச்சிதமாக செய்து முடிக்க கூடியவர்.ஆரம்ப காலங்களில் நடிக்க தொடங்கிய காலத்திலேயே கற்றது தமிழ்,ராம், ஈ என வித்தியாசமான ரோல்களில் தேர்ந்தெடுத்து நடித்து ரசிகர்கள் மத்தியில் தனி இடத்தை பிடித்தார். இன்றுவரை ஜீவாவின் திரைவாழ்க்கையில் ராம்,கற்றது தமிழ், ஈ உள்ளிட்ட திரைப்படங்களுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. அதே போல படங்களில் தொடர்ந்து நடிக்க வேண்டும் என ரசிகர்கள் கேட்டுக் கொண்டு வருகின்றனர்.

மீண்டும் ஜீவாஉடன் கூட்டணி

மீண்டும் ஜீவாஉடன் கூட்டணி

இந்த நிலையில் ஜீவா கமர்ஷியல் படங்களில் தற்போது பெரும்பாலும் கவனம் செலுத்தி வருகிறார் சுந்தர் சி இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியான கலகலப்பு 2 மாபெரும் வெற்றி பெற்றது அந்த வெற்றியை தொடர்ந்து மீண்டும் ஜீவா கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்துள்ள படத்துக்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை படப்பிடிப்பு மொத்தமும் முடிந்து தயாரிப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது மேலும் இந்த படத்தில் ஜீவாவுடன் இணைந்து ஜெய்,ஸ்ரீகாந்த் ஆகியோரும் நடித்து வருகின்றனர்.

ஸ்ரீகாந்த் கதாபாத்திரத்தில்

ஸ்ரீகாந்த் கதாபாத்திரத்தில்

இதுவரை தமிழ் சினிமாவில் மட்டும் கலக்கிக் கொண்டிருந்த நடிகர் ஜீவா பாலிவுட்டிலும் கால் பதித்துள்ளார் . கிரிக்கெட் வீரர் கபில் தேவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் கதாபாத்திரத்தில் நடித்து கலக்கிய ஜீவா இப்போது பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமாக உள்ளார். இனி இந்திப் படங்களிலும் ஜீவா நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது

லவ் லெட்டர் கொடுத்தேன்

லவ் லெட்டர் கொடுத்தேன்

தொடர்ந்து கமர்ஷியல் ஃபார்முலாவில் பணியாற்றிக் கொண்டிருக்கும் ஜீவா கோல்மால், மாதவி, வரலாறு முக்கியம் உள்ளிட்ட படங்களில் தற்போது நடித்து வருகிறார். படங்களில் மட்டும் அல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் எதார்த்தமாக பேசக்கூடிய ஜீவா அளித்த பேட்டி ஒன்றில் 8வது படிக்கும் போது லவ் லெட்டர் கொடுத்ததாக ஓபனாக பேசிய உள்ளார். திரைப்படங்களில் துறுதுறுப்பான கதாபாத்திரங்களில் நடிக்கும் ஜீவா நிஜ வாழ்க்கையிலும் சிறுவயதிலிருந்தே இப்படியா என ரசிகர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர் .

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X