விஜய் மீது பொறாமை இல்லை.. தொண்டர்களே, ரசிகர்களே ஜாக்கிரதையாக இருங்கள்... ரஜினி ஓபன் டாக்
சென்னை: தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்றிருக்கிறார் சி.ஜோசப் விஜய். அவர் முதலமைச்சரானதும் மாற்று கட்சி தலைவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். திரைத்துறையிலிருந்தும் கமல் உள்ளிட்டோர் அவரை நேரில் சந்தித்தார்கள். ஆனால் ரஜினியிடமிருந்து வாழ்த்தோ, அல்லது இரண்டு பேருக்குமான சந்திப்போ நிகழாமல் இருந்தது. அது பெரிய சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து அதுகுறித்து விளக்கமளித்திருக்கிறார் ரஜினி.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக கட்சி 108 தொகுதிகளில் வென்றது. அதனையடுத்து மற்ற கட்சிகளின் ஆதரவோடு விஜய் முதலமைச்சராகியிருக்கிறார். அவர் சி.எம்மாக பதவியேற்றதிலிருந்து தவறாமல் தலைமை செயலகம் வந்து பல பணிகளை மேற்கொண்டுவருகிறார். முந்தைய ஆட்சியில் மக்களுக்கு பயன் தந்த மகளிருக்கான கலைஞர் உரிமை தொகை, நான் முதல்வன் திட்டம் உள்ளிட்டவற்றுக்கு எந்த பாதகமும் வராமல் நடைமுறையும் படுத்திவருகிறார்.

ரஜினி பத்திரிகையாளர் சந்திப்பு: மேலும், மாற்று கட்சி தலைவர்களையும் அவர் சந்தித்து வாழ்த்து பெற்றார். திரைத்துறையிலிருந்து கமல், விக்ரமன், நாசர், கார்த்தி உள்ளிட்டோரும் சந்தித்தார்கள். மற்றும் பல கலைஞர்கள் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தார்கள். ஆனால் ரஜினியிடமிருந்து வாழ்த்து வரவில்லை. மேலும் இரண்டு பேரும் சந்தித்துக்கொள்ளவும் இல்லை. எனவே விஜய் முதலமைச்சரானதில் ரஜினிக்கு விருப்பமில்லை போல என பேச்சுக்கள் கிளம்பின. இந்நிலையில் இதுகுறித்து ரஜினி இன்று செய்தியாளர்களை சந்தித்து விளக்கம்ளித்தார்.
ரஜினி பேசியது: அவர் பேசுகையில், " விஜய் மீது எனக்கு எந்த பொறாமையும் இல்லை. அவர் தனித்து நின்று வெற்றி பெற்றதில் எனக்கு ஆச்சரியம் கலந்த சந்தோஷம். கொளத்தூரில் மு.க.ஸ்டாலின் தோற்றது வருத்தமாக இருக்கிறது. நான் அரசியலுக்கு ஏன் வரவில்லை என்று விளக்கமும் கொடுத்தேன். அதை தெரிந்தும் மீண்டும் கேட்பதை எப்படி எடுத்துக்கொள்வது. விஜய்யையும் என்னையையும் ஒப்பிடுவதே தவறு. விஜய் வென்றவுடனேயே அவருக்கு வாழ்த்து தெரிவித்துவிட்டேன். விஜய் மீது எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கீறது.
அவருக்கு டைம் கொடுங்கள்: விஜய்க்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் டைம் கொடுங்கள். அவரது ரசிகர்களும், தொண்டர்களும் சின்ன தவறு செய்தாலும் விஜய்யைத்தான் பாதிக்கும் என்பதை புரிந்துகொண்டு அவர்கள் ஜாக்கிரதையாக நடந்துகொள்ள வேண்டும். 60 ஆண்டு காலமாக திராவிட ஆட்சியை பார்த்தார்கள். இப்ப்போது மாற்றம் தேவை என்று விஜய்க்கு வாக்களித்திருக்கிறார்கள். விஜய் மீது அதீத எதிர்பார்ப்பு இருக்கிறது. அந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் விஜய் பூர்த்தி செய்வார். இதற்கு முன்னர் நான் எந்த முதலமைச்சரின் பதவியேற்பு விழாவிலும் கலந்துகொண்டதில்லை. 96லேயே கலைஞர் பதவியேற்றபோது நான் செல்லவில்லை.
கண்டிப்பாக வென்றிருப்பேன்: நான் அரசியல் கட்சி ஆரம்பித்திருந்தால் நூறு சதவீதம் வெற்றி பெற்றிருப்பேன். அதில் சந்தேகமே இல்லை. விஜய்க்கு எனது இதயப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் இளைஞர்கள், சமூக வலைதளங்கள் போன்றவை முக்கிய பங்காற்றியிருக்கின்றன. மு.க.ஸ்டாலின் எனக்கு 40 ஆண்டுகால நண்பர் என்பதால் அவரை நேரில் சென்று சந்தித்தேன்" என்றார். அவரது இந்த விளக்கம் பல சர்ச்சைகளுக்கும் வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது.


Click it and Unblock the Notifications
