அந்த படத்திற்கு நான் சம்பளமே வாங்கவில்லை...காரணத்தை சொல்லும் அரவிந்த்சாமி
சென்னை : ஒரு கட்டத்தில் சினிமாவே வேண்டாம் என நினைத்த நடிகர் அரவிந்த்சாமி மீண்டும் கம்பேக் கொடுத்து படங்களில் பட்டையை கிளப்பிக் கொண்டு உள்ளார்.
தொடர்ந்து வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த அரவிந்த்சாமி தமிழ்,தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார்
இப்பொழுது கள்ளபார்ட், சதுரங்க வேட்டை 2, வணங்காமுடி உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் அரவிந்த் சாமி ஒரு படத்திற்கு தான் சம்பளமே வாங்காமல் நடித்ததாக கூறியுள்ளார்.

ஹிட் நாயகன் லிஸ்டில்
பெண்களின் கனவு கண்ணன் என 90 முதல் இன்று வரை ரசிகைகளால் கொண்டாடப்படுபவர் நடிகர் அரவிந்த்சாமி. தளபதி திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்த இவர் அதைத் தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்தார். குறிப்பாக ரோஜா, பம்பாய்,மின்சார கனவு, இந்திரா, என் சுவாச காற்றே என பல வெற்றி படங்களில் நடித்து ஹிட் நாயகன் லிஸ்டில் சேர்ந்தார். தமிழ் மட்டுமல்லாமல் ஹிந்தியும் மிக சரளமாக பேசக்கூடிய அரவிந்த்சாமி இந்தியிலும் பல படங்களில் நடித்துள்ளார்.

மகேந்திரன் இயக்கத்தில் சாசனம்
வெற்றிகரமான ஹீரோவாக வலம் வந்து கொண்டிருந்த போது திடீரென திரைத் துறையில் இருந்து சற்று விலகி படங்களில் நடிக்காமல் இருந்த அரவிந்த்சாமி ஒரு கட்டத்தில் சினிமாவை விட்டு வெளியேறி வேறு ஒரு வேலையை செய்ய தயாராக இருந்தார். இந்த நிலையில் இயக்குனர் மகேந்திரன் இயக்கத்தில் சாசனம் என்ற படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. உதிரிப்பூக்கள், முள்ளும் மலரும், நெஞ்சத்தைக் கிள்ளாதே, ஜானி, ஆடுபுலி ஆட்டம் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களையும் சர்வதேச அளவில் விருதுகளை வென்ற படங்களையும் இயக்கியவர் இயக்குனர் மகேந்திரன் தெறி படத்தில் வில்லனாக நடித்து மிரட்டியிருப்பார்.

நீண்டநாள் ஆசையாக
பாண்டியராஜன் நடிப்பில் வெளியான ஊர் பஞ்சாயத்து படத்திற்கு பிறகு இயக்குனர் மகேந்திரன் சரியாக படங்களை இயக்கவில்லை. இந்த நிலையில் அரவிந்த்சாமியை சந்தித்து சாசனம் என்ற படத்தின் கதையை கூறியுள்ளார். சினிமாவில் இருந்து விலக நினைத்த அரவிந்த்சாமி மகேந்திரன் இயக்கத்தில் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்பது நீண்டநாள் ஆசையாக கொண்டிருந்தார். இந்த நிலையில் மகேந்திரன் கேட்டவுடன் சாசனம் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்.

சம்பளமே வாங்கவில்லை
மகேந்திரன் இயக்கத்தில் வெளியான கடந்த சில படங்கள் சரியாக ஓடவில்லை என்பதால் பல தயாரிப்பாளர்களும் மகேந்திரன் படங்களை தயாரிக்க முன் வரவில்லை. தான் பெரிதும் மதிக்கத்தக்க இயக்குனர் இயக்கத்தில் நடிக்கப் போகிறோம் என்பதால் சாசனம் படத்திற்கு சம்பளம் வாங்காமலேயே அரவிந்த்சாமி நடித்துக் கொடுத்துள்ளார். இந்த தகவலை அரவிந்த் சாமியே பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











