நான் பேசும் தமிழ் நல்லா இருக்கும்-ஷாருக்கான்

Recommended Video

Bigil Trailer : தளபதி வெறித்தனம் ட்ரைலர் 12 அக்டோபர் 6 மணிக்கு-வீடியோ

சென்னை: தமிழ் சினிமா ரசிகர்களுக்கு படம் இயக்குவீர்களா என்று ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த ஷாருக்கான், கண்டிப்பாக என்றும், தான் பேசும் தமிழ் மொழி நன்றாக இருக்கும் என தெரிவித்திருந்தார். அது மட்டுமின்றி தனுஷ் ரசிகர் ஒருவர் கேட்டிருந்த கேள்விக்கும் பதிலளித்து இருந்தார் ஷாருக்கான். அதில் அவர் தனுஷை பற்றி ஒரு வார்த்தை என்று கேட்க, எனக்கு பிடித்தமானவர் என்று சொல்லி இருக்கிறார்.

பாலிவுட் நடிகர் பாலிவுட் சினிமாவில் தாதாவாக இருந்தாலும், தமிழ் சினிமா இவருக்கு ரொம்ப பிடிக்கும். அதனால் தான் அடிக்கடி தமிழ் சினிமா சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார். தனது நண்பரான கமல்ஹாசன் தயாரித்து நடித்த ஹேராம் படத்தில் நடித்து தனது தமிழ் பட ஆசையை பூர்த்திசெய்து கொண்டார்.

I like very much Dhanush-Shah Rukh Khan

அதேபோல் சமூக வலைதளங்கள் மூலமாக ஷாருக்கான் அவ்வப்போது தனது ரசிகர்களுக்கு ஷாக் கொடுப்பது வழக்கம். அதே போல் கடந்த திங்களன்று ட்விட்டரில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்துக் கொண்டிருந்தார்.

அதில் நீங்கள் தமிழ் சினிமாவுக்காக எதிர்காலங்களில் படம் இயக்குவீர்களா என்ற ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த ஷாருக்கான், கண்டிப்பாக என்றும், தான் பேசும் தமிழ் மொழி நன்றாக இருக்கும் என தெரிவிந்திருந்தார். அது மட்டுமின்றி தனுஷ் ரசிகர் ஒருவர் கேட்டிருந்த கேள்விக்கும் பதிலளித்து இருந்தார் ஷாருக்கான்.

அதில் அவர் தனுஷை பற்றி ஒரு வார்த்தை என்று கேட்க, எனக்கு பிடித்தமானவர் என்று சொல்லி இருக்கிறார். தனுஷ் கொலை வெறி பாடலின் மூலம் உலகம் முழுவதும் பிரபலம் ஆகிய போது தனுஷை வெகுவாக பாராட்டியவர் ஷாருக்கான். தனுஷ் பற்றிய கேள்விக்கு பதிலளித்த ஷாருக்கானுக்கு, நடிகர் சதீஷும் பதிலுக்கு வீ டூ சார், கண்டிப்பாக நாங்களும் உங்களை விரும்புகிறோம் என்ற பதிவை ஏற்றி இருந்தார்.

தனுஷை மட்டுமல்ல பல தமிழ் நடிகர்கள் பற்றி ஷாருக்கான் பேசியிருக்கிறார். அவர் ஒரு மேடையில் தனது படங்களை மற்ற மொழிகளில் டப்பிங் செய்யும் போது, முதலில் தமிழிலேயே டப் செய்யப்படுகிறது. காரணம், எனக்கு பாலிவுட் தவிர்த்து மற்ற மொழி ரசிகர்களில், தமிழ் நாட்டில் தான் ரசிகர்கள் அதிகம் என கூறியிருந்தார்.

கடைசியாக ஷாருக்கான் ஜீரோ படத்தில் நடித்து இருந்தார். அது ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதில் அபூர்வ சகோதரர்கள் படத்தில் கமல்ஹாசன் நடித்த அப்பு கதாபாத்திரம் போலவே, ஒரு குள்ள மனிதராக நடித்து இருந்தார் ஷாருக்கான். அதில் அவருக்கு ஜோடியாக அனுஷ்கா சர்மா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X