மாலையை கழட்டியாச்சு.. மாடலா மாறியாச்சு.. மாநாடுக்கு ரெடியான சிம்பு!

சென்னை: எத்தனை ஃப்ளாப் கொடுத்தாலும், மறுபடியும் ஈஸியா ஒரு ஹிட் கொடுத்து டாப் ஸ்டாராக மாறும் கெத்து சிம்புவின் சொத்தாகவே உள்ளது.

சிம்புவின் அன்பானவன் அசராதவன், அடங்காதவன் படம் படுதோல்வியை சந்தித்த நிலையில், சிம்பு அவ்ளோதான் என பலரும் கூறினர்.

ஆனால், அடுத்து டக்குன்னு மணிரத்னம் இயக்கத்தில் செக்கச்சிவந்த வானம் படத்தில் அதிரடியாக கம்பேக் கொடுத்து தனது ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

மீண்டும் ஃப்ளாப்

மீண்டும் ஃப்ளாப்

அதற்கு அடுத்ததாக சுந்தர்.சி இயக்கத்தில் வந்தா ராஜாவாத்தான் வருவேன் படத்தை பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த சிம்புவுக்கு அந்த ரீமேக் படம் தமிழில் மீண்டும் ஒரு படுதோல்வியை கொடுத்தது.

மாநாடு

மாநாடு

வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் அரசியல் பேச தயாரான சிம்புவுக்கு ஆரம்பத்திலேயே தயாரிப்பு தரப்புடன் பிரச்சனை ஏற்பட்டது. அதற்கு பிறகு, மீண்டும் சிம்பு, சில நாட்கள் முடங்கியிருந்தார். மஃப்டி படத்தின் ரீமேக்கில் இருந்தும் சிம்பு விலகுகிறார். சிம்பு இனி நடிக்க மாட்டார் போன்ற தகவல்கள் வெளியாகின.

சபரி மலை

இந்நிலையில், ஐயப்ப சாமிக்கு மாலை போட்டிருந்த சிம்புவின் புகைப்படங்கள் மீண்டும் ரசிகர்களிடையே வைரலாகின.

மீண்டும் மாநாடு

மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியே சிம்பு மலைக்கு போய்விட்டு திரும்பி வந்து மாலையை கூட கழட்டாமல் நள்ளிரவு 1.30 மணிக்கு மாநாடு படத்திற்காக பாக்ஸிங் பயிற்சி செய்யும் வீடியோ க்ளிப்பை விட அது இணையத்தில் பயங்கர வைரலானது.

செல்ஃபி

இந்நிலையில், தற்போது மாலையை கழட்டி, கட்டிங், ட்ரிம்மிங் செய்து படு ஸ்மார்ட்டாக மாடல் நடிகராக மாறியுள்ள சிம்புவின் லேட்டஸ்ட் செல்ஃபி புகைப்படங்கள் வெளியாகி இணையத்தை கலக்கி வருகின்றன. விரைவில் சிம்புவின் மாநாடு படம் தொடங்கவுள்ள நிலையில், இந்த முறை தனது ரசிகர்களுக்கு நிச்சயம் மிகப்பெரிய வெற்றியை சிம்பு கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X