பாலச்சந்தரின் தீவிர ரசிகன் நான் - ஆமீர்கான்
கே பாலச்சந்தரின் தீவிர ரசிகன் நான். அவரது ஏக் துஜே கேலியே பார்த்து வியந்திருக்கிறேன் என்று நடிகர் ஆமீர்கான் கூறினார்.
சென்னை திரைப்பட விழாவை தொடஹ்கி வைக்க இரு தினங்களுக்கு முன்பே சென்னை வந்தார் ஆமீர்கான்.
பின்னர் கமல்ஹாஸனை அவரது வீட்டில் சந்தித்துப் பேசினார் ஆமீர். இரவு அங்கேயே தங்கினார்.

காலையில் இயக்குநர் பாலசந்தர் வீட்டுக்குச் சென்றார். அங்கு பாலசந்தரை சந்தித்து ஆசி பெற்றார். இருவரும் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.
தமிழ், இந்தி பட உலகம் பற்றி கலந்துரையாடினார்கள். அதன் பிறகு பாலசந்தரிடம் விடை பெற்றுக் கொண்டு அமீர்கான் புறப்பட்டார்.
பாலசந்தரை சந்தித்தது குறித்து அமீர்கான் கூறுகையில், "இந்திய திரையுலகில் முக்கிய இடம் வகிக்கும் சாதனையாளர் பாலசந்தர். பல நட்சத்திரங்களை உருவாக்கியவர்.
இந்தியில் அவர் இயக்கிய ஏக் துஜே கேலியே படம் பார்த்து வியந்தேன். தாதா சாகேப் பால்கே விருது பெற்றுள்ள அவரது தீவிர ரசிகன் நான்,'' என்றார்.


Click it and Unblock the Notifications











