நான் அவன் இல்லை: முத்த வீடியோ பற்றி சிம்பு விளக்கம்
சென்னை: ஹோட்டல் காரிடரில் லிப் டூ லிப் முத்தம் கொடுக்கும் வீடியோவில் இருப்பது தான் இல்லை என்று நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார்.
அண்மையில் மலேசியாவில் நடந்த சிமா விருது வழங்கும் விழாவில் சிம்பு கலந்து கொண்டார். விருது விழா கடந்த 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் மலேசிய தலைநகர் கோலாம்பூரில் நடைபெற்றது.
இந்நிலையில் கடந்த 13ம் தேதி அன்று பதிவான முத்தக்காட்சி அடங்கிய வீடியோ இணையதளத்தில் தீயாக பரவியுள்ளது.

முத்தம்
ஹோட்டல் ஒன்றில் காரிடரின் ஓரத்தில் ஒரு ஆணும், பெண்ணும் லிப் டூ லிப் முத்தம் கொடுக்கும் வீடியோ இணையதளத்தில் தீயாக பரவியுள்ளது.

சிம்பு, ஹர்ஷிகா
வீடியோவில் இருப்பது சிம்புவும், சிமா விருது விழாவை தொகுத்து வழங்கிய ஹர்ஷிகா என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இல்லை
சர்ச்சைக்குரிய வீடியோவில் இருப்பது தான் இல்லை என்றும், அந்த வீடியோ போலியானது என்றும் சிம்பு தெரிவித்துள்ளார்.

டென்ஷன்
போலியான வீடியோவை பார்த்து நான் எதற்காக டென்ஷன் ஆக வேண்டும் என்று கூலாக கேட்டுள்ளார் சிம்பு.


Click it and Unblock the Notifications











