11 வயதில் இருந்தே பிரச்சாரத்திற்கு செல்கிறேன்: உதயநிதி ஸ்டாலின்
நீலகிரி: எனக்கு அரசியல் வேண்டாம், நடிகனாக இருக்கவே விரும்புகிறேன் என திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலினின் மகனும், நடிகருமான உதயநிதி தெரிவித்துள்ளார்.
நீலகிரி தொகுதியில் போட்டியிடும் ஆ. ராசாவுக்கு ஆதரவாக திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் கடந்த வெள்ளிக்கிழமை பிரச்சாரம் செய்தார். நீலகிரி வந்த அவருடன் அவரது மனைவி துர்கா, மகன் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் வந்திருந்தனர்.
பிரச்சாரத்திற்கு முன்பு அவர்கள் முன்னாள் சட்டசபை உறுப்பினர் எல்.பி. தர்மலிங்கத்தின் வீட்டுக்கு சென்றனர். அப்போது உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

பிரச்சாரம்
அப்பா பிரச்சாரம் செய்ய செல்லும்போது எல்லாம் நானும் அவருடன் செல்வது வழக்கம். நான் 11 வயதில் இருந்தே அவருடன் பிரச்சாரத்திற்கு சென்று கொண்டிருக்கிறேன்.

அரசியல்
நான் என்ன தான் பிரச்சாரத்திற்கு அப்பாவுடன் சென்றாலும் எனக்கு அரசியலில் ஈடுபாடு இல்லை.

நண்பேன்டா
நான் சந்தானுத்துடன் நண்பேன்டா படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு அரசியல் வேண்டாம். ஒரு நல்ல நடிகனாக வேண்டும் என்பதே எனது விருப்பம்.

காமெடி
ஆக்ஷன் படம் எனக்கு பொருத்தமாக இருக்காது. அதனால் காமெடி ஹீரோவாக நடிக்கவே விரும்புகிறேன். எனக்கும், சந்தானத்திற்கும் இடையே நல்ல காம்பினேஷன் உள்ளது. அதை பிரித்துவிட வேண்டாம்.

தயாரிப்பு
என்னுடைய 3வது படமும் என் தயாரிப்பிலேயே உருவாகி வருகிறது. 10 நாட்கள் படப்பிடிப்பு இல்லாததால் அப்பாவுடன் வந்தேன்.

கதிர்வேலன் காதல்
ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் என் நடிப்பில் இருந்த குறைகளை இது கதிர்வேலன் காதல் படத்தில் சரி செய்தேன். அந்த படத்தில் என் நடிப்பை பலரும் பாராட்டினார்கள். நண்பேன்டாவிலும் நடிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவேன் என்றார் உதயநிதி.


Click it and Unblock the Notifications











