தளபதி அல்ல நான் தல ரசிகன்: சொல்வது சர்கார் விழாவை தொகுத்து வழங்கிய பிரசன்னா

By Siva

சென்னை: நான் தளபதி அல்ல தல ரசிகன் என்று தெரிவித்துள்ளார் நடிகர் பிரசன்னா.

சர்கார் இசை வெளியீட்டு விழாவை நடிகர் பிரசன்னா, தியா ஆகியோர் தொகுத்து வழங்கினார்கள். நிகழ்ச்சியை பார்த்தவர்கள் இந்த பிரசன்னாவுக்கு எதற்காக இந்த தேவையில்லாத வேலை என்றார்கள்.

பாவம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறேன் என்ற பெயரில் சொதப்பிவிட்டார்.

பிரசன்னா

பிரசன்னா

விஜய் பட விழாவை தொகுத்து வழங்க சன் டிவியில் உருப்படியாக ஒருவர் கூடவா இல்லை. இந்த பிரசன்னாவை அழைத்து வந்து சொதப்பிவிட்டார்களே என்பது விஜய் ரசிகர்களின் குமுறல். பிரசன்னா சிறந்த நடிகர் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது அவருக்கு வரவில்லை என்பது தான் உண்மை.

தல

நீங்கள் தளபதி ரசிகனா ப்ரோ என்று ஒருவர் பிரசன்னாவிடம் ட்விட்டரில் கேட்டார். அதற்கு அவரோ சட்டென்று, நான் தல ரசிகன். ஆனால் தளபதி மீது அதிக மரியாதை வைத்துள்ளேன் என்றார். பிரசன்னாவின் இந்த ட்வீட்டை பார்த்த தல ரசிகர்கள் அதை அதிக அளவில் ரீட்வீட் செய்துள்ளனர்.

இல்லை

தளபதி ரசிகன்னு சொல்லித்தான் உள்ளே வந்துட்டேன்னு நீங்கள் சர்கார் இசை வெளியீட்டு விழாவில் சொன்னதை கேட்டு குழப்பமாகிவிட்டது. ஏனென்றால் நான் தீவிர தல ரசிகன் என்று நீங்கள் ஏற்கனவே கூறியிருந்தீர்கள். இப்போ ஓகே என்று தல ரசிகர் ஒருவர் தெரிவித்தார். அதை பார்த்த பிரசன்னா, என்னையோ, தியாவையோ தடுத்து நிறுத்தினார்கள் என்று நினைக்கிறீர்களா?. அந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் எவ்வளவு முக்கியம் என்பதற்காக அப்படி சொன்னேன். அவர்கள் தான் விஐபிக்கள் என்று பதில் ட்வீட் போட்டுள்ளார் பிரசன்னா.

சர்கார்

சர்கார்

தல ரசிகன் என்பதால் தான் சர்கார் இசை வெளியீட்டு விழாவை சொதப்பிவிட்டார் பிரசன்னா என்று தளபதி ரசிகர்கள் கோபம் அடைந்துள்ளனர். தல ரசிகனை அழைத்து வந்து தளபதி விழாவை கவுத்திவிட்டீர்களே என்று விஜய் ரசிகர்கள் நொந்துள்ளனர். இது குறித்து ட்விட்டரில் தல, தளபதி ரசிகர்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X