'இது'க்கு தான் என்னை டார்கெட் செய்கிறார்கள்: விஷால்
Recommended Video

சென்னை: சில தயாரிப்பாளர்கள் தன்னை டார்கெட் செய்வதற்கான காரணத்தை தெரிவித்துள்ளார் விஷால்.
தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷாலுக்கு எதிராக சில தயாரிப்பாளர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். முக்கியமாக கடந்த நிர்வாகம் வைத்துச் சென்ற வைப்பு நிதி ரூ. 7 கோடியை விஷால் என்ன செய்தார் என்று கேட்கிறார்கள்.
மேலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து விஷால் மீது புகாரும் அளித்துள்ளனர்.
விஷால்
அனைத்தையும் இழந்த தயாரிப்பாளர்களுக்கு நல்லது செய்ய நினைப்பதால் என்னை டார்கெட் செய்கிறார்கள். என்ன நடந்தாலும் நான் அவர்களுக்கு உதவி செய்வேன். என் மனசாட்சி சுத்தமாக உள்ளது. கடவுளும், உண்மையும் என் பக்கம் உள்ளது. இளையராஜா சார் நிகழ்ச்சியை நடுத்துவதில் இருந்து என்னை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்று விஷால் ட்வீட் செய்துள்ளார்.
ரூ. 7 கோடி
சும்மா அழுவதை விட்டுவிட்டு அந்த ரூ. 7 கோடி என்னாச்சுன்னு சொல்லுங்க விஷால்.
நம்பிக்கை
யாருமே இல்லாத கடையில் யாருக்கு விஷால் டீ ஆத்துகிறீர்கள். கணக்கை சொல்லிவிட்டால் அனைவருக்கும் உங்கள் மீது நம்பிக்கை வரப் போகிறது.
தமிழ் ராக்கர்ஸ்
தமிழ் ராக்கர்ஸில் விஷாலுக்கு பங்கு உள்ளது என்று கூறப்பட்டுள்ள நிலையில் இப்படி ஒரு புகார். அவங்க அவங்க கவலை அவங்க அவங்களுக்கு.


Click it and Unblock the Notifications











