காதல் காட்சிக்கு டூப் போடாமல் சண்டை காட்சிக்கு மட்டும் டூப் எதற்கு: அஜீத்

By Siva

சென்னை: காதல் காட்சிக்கு யாரும் டூப் போடாதபோது சண்டை காட்சிக்கு மட்டும் டூப் போடுவதில் நியாயம் இல்லை என்று அஜீத் குமார் தெரிவித்துள்ளார்.

சண்டை காட்சிகளில் டூப் போட விரும்பாதவர் அஜீத். எத்தனை ரிஸ்க்கான காட்சியாக இருந்தாலும் நான் தான் நடிப்பேன் என்று அடம்பிடித்து நடிப்பவர். அப்படி அவர் வீரம் படத்திலும் டூப் போடாமல் சண்டை காட்சிகளில் நடித்துள்ளார்.

அதிலும் குறிப்பாக ரயிலில் வரும் ஒரு சண்டை காட்சியில் நடித்துள்ளார். இந்த காட்சி குறித்து சிவா கூறுகையில்,

ரயில் காட்சி

ரயில் காட்சி

ரயில் ஓடிக் கொண்டிருக்கும்போது ஒரு கையால் சண்டை போட்டுக் கொண்டு மற்றொரு கையால் கம்பிகளை பிடித்து அஜீத் நகர வேண்டும். இந்த காட்சியில் ரிஸ்க் அதிகம் என்பதால் டூப் போடலாம் என்று அஜீத்திடம் தெரிவித்தேன். ஆனால் அவர் டூப் போட மறுத்துவிட்டார்.

பார்த்துவிடலாம்

பார்த்துவிடலாம்

ரயில் காட்சியில் அப்படி என்ன தான் ரிஸ்க் இருக்கிறது என்பதை பார்த்துவிடலாம் என்று களம் இறங்கிய அஜீத் சிறப்பாக அந்த காட்சியில் நடித்தார். ஆனால் அவர் நடித்து முடிக்கும் வரை எங்களுக்கு எல்லாம் பயமாக இருந்தது.

ஏன் இப்படி?

ஏன் இப்படி?

ஏன் இப்படி ரிஸ்க் எடுத்து நடிக்கிறீர்கள் என்று அஜீத்தை கேட்டேன். அதற்கு அவர், நான் தான் ஹீரோ. அதனால் நான் தான் வில்லனை அடிக்க வேண்டுமே தவிர டூப் நடிகரை வைத்து அடிக்க வைக்கக் கூடாது என்றார் அஜீத்.

காதலுக்கு

காதலுக்கு

காதலியை கட்டிப்பிடித்து நடிக்கும் காட்சிகளில் எல்லாம் டூப் போடாமல் ஹீரோ தான் நடிக்கிறார். அப்படி இருக்கையில் சண்டை காட்சிகளில் டூப் நடிகரை நடிக்க வைப்பதில் நியாயம் இல்லையே. அதனால் தான் எதுவாக இருந்தாலும் நானே நடித்துவிடலாம் என்று முடிவு செய்தேன் என்று அஜீத் என்னிடம் தெரிவித்தார் என்றார் சிவா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X