எனக்கு ரத்த வாந்தி வந்துட்டு இருக்கு.. அவங்கதான் சூனியம் வெச்சாங்க.. குண்டை தூக்கி போட்ட ரவி மோகன்

சென்னை: ஆர்த்தியை பிரிந்த ரவி மோகன்; சில வருடங்களாக பின்னணி பாடகி கெனிஷாவுடன் நெருக்கமாக இருந்தார். இரண்டு பேரும் விரைவில் திருமணம் செய்துகொள்வார்கள் என்று எதிர்பார்த்த சூழலில்; அவர்களுக்கிடையே பிரேக்கப்பும் நடந்திருக்கிறது. இதுகுறித்து நேற்று கெனிஷா ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் நடிகர் ரவி மோகன் செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில் எனக்கு ரத்த வாந்தி வந்துகொண்டிருக்கிறது என கூறி அதிர்ச்சியை கிளப்பியிருக்கிறார்.

தமிழ் சினிமாவில் பெரிய அளவில் கிசுகிசுவிலும், சர்ச்சைகளிலும் சிக்காமல் இருந்தவர் ரவி மோகன். அவர் ஆர்த்தி என்பவரை கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். நல்லபடியாக போய்க்கொண்டிருந்த அவர்களது திருமண வாழ்க்கை சில வருடங்களுக்கு முன்பு பிரிவில் வந்து நின்றது. ஆர்த்தியை பிரிந்துவிட்டு பின்னணி பாடகி கெனிஷாவுடன் நெருக்கமாக இருந்தார் ரவி. விரைவில் அவர்கள் இரண்டு பேருக்கும் திருமணம் நடக்கவிருப்பதாகவும் திரைத்துறையில் பேச்சுக்கள் ஓடிக்கொண்டிருந்தன.

I m Vomiting Blood Ravi Mohan Opens Up Amid Kenishaa Breakup Rumours

கெனிஷா வீடியோ: இப்படிப்பட்ட சூழலில்தான் கெனிஷா நேற்று ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில் அவர் தனது முதல் திருமண வாழ்க்கையில் பட்ட கஷ்டங்கள், கரு கலைந்தது உள்ளிட்ட பல விஷயங்களை பேசினார். அதுமட்டுமின்றி ரவி மோகனின் குடும்பத்தை தான் பிரிக்கவில்லை என்றும்; அவரை முழு சுதந்திரத்துடன் வழியனுப்பி வைக்கிறேன். இனிமேல் நான் அவருக்காக போராடப்போவதில்லை. அவரை காப்பாற்றுவதற்காக என்னையே நான் தியாகம் செய்தேன் என்றெல்லாம் பேசியிருந்தார்.

Also Read
தூங்கும் சிங்கத்தை எழுப்பாதீங்க.. ரவி மோகன் விஷயத்தில் கெனிஷாவுக்கு ஆர்த்தி ரவி எச்சரிக்கை
தூங்கும் சிங்கத்தை எழுப்பாதீங்க.. ரவி மோகன் விஷயத்தில் கெனிஷாவுக்கு ஆர்த்தி ரவி எச்சரிக்கை

ரசிகர்கள் அதிர்ச்சி: மேலும் சென்னையிலிருந்து வெளியேறப்போவதாகவும்; இனிமேல் எப்போதுமே வரமாட்டேன் என்றும் தெரிவித்தார். அவரது அந்த வீடியோவை பார்த்த ரசிகர்களோ, ரவியுடனான ரிலேஷன்ஷிப்பை கெனிஷா பிரேக் அப் செய்துவிட்டார் போல என்று கூறிவருகிறார்கள். கெனிஷா அப்படி வீடியோ வெளியிட்டதை அடுத்து ஆர்த்தி ரவி தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்று, 'தூங்கிக்கொண்டிருக்கும் சிங்கத்தை ஒருபோதும் எழுப்பக்கூடாது. ஒரு தாய் சிங்கமாக அது இருந்தால் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும். என்னுடைய கண்ணியமான அமைதியை ஒருபோதும் பலவீனமாக நினைக்கக்கூடாது. தேவைபட்டால் என் குழந்தைகளையும், கண்ணியத்தையும் காபாற்றுவதற்காக உண்மையுடன் இந்த உலகத்தை எதிர்கொள்வேன்' என பதிவிட்டிருந்தார்.

ரவி மோகன் பேச்சு: இந்நிலையில் ரவி மோகன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "நான் ஒன்றும் Born With Silver Spoon கிடையாது. கஷ்டப்பட்டுத்தான் இந்த இடத்துக்கு நான் வந்தேன். அனைத்தையுமே நான் கொடுத்துவிட்டேன். 104 டிகிரி காய்ச்சலோடு எல்லாம் நான் ஷூட்டிங்கிற்கு சென்றிருக்கிறேன். ஒரு இட்லி நடிகை என்னை பற்றி பேசுகிறார். என்னை பற்றி பேசுவதற்கு அவருக்கு என்ன அருகதை இருக்கிறது. பெர்சனலாக பேசவெல்லாம் கூடாது. அவரால் எங்கள் குடும்பம் நாசமாக போக பார்த்தது என்று மூன்று சீனியர் நடிகர்கள் சொன்னார்கள்.

ரத்த வாந்தி: எனக்கு ரத்த வாந்தி வந்துகொண்டிருக்கிறது. பிளாக் மேஜிக் செய்துகொண்டிருக்கிறார்கள். தங்கள் பேச்சை கேட்க வேண்டும் என்பதற்காக அதை அவர்கள் செய்தார்கள். பெட்டி பாம்பு மாதிரி என்னை வைத்திருந்தார்கள். இதெல்லாம் எனக்கு தெரிகிறது. அப்பா, அம்மா கொடுத்த அறிவால் அது தெரிகிறது. ஆனால் அவர்கள் வளர்த்த விதம் என்னை காலி செய்துகொண்டே இருந்தது. முதுகில் குத்துகிறார்கள் என்றும் தெரியும். மாறிடுவார்கள் என்று எத்தனையோ நாட்கள் நினைத்தேன். வீட்டில் மரியாதை இல்லை என்றால் எப்படி. நான் கேட்பது அடிப்படைதானே. வேலைக்கு போய்விட்டு வந்தால் நிம்மதியே இருக்காது. நிறைய ஆதாரங்களை ஏஐயில் க்ரியேட் செய்து வைத்திருப்பார்கள்.

என்னிடம் உண்மையான ஆதாரங்களே இருக்கின்றன. ஒருவரின் வாழ்க்கையிலோ, இமேஜிலோ விளையாடக்கூடாது. உங்களுக்கு எல்லாம் வெட்கமாக இல்லையா?.. எல்லோருமே சொன்னார்கள் நான்தான் கேட்கவில்லை.' கடைசி இரண்டு வருடங்களாகத்தான் நன்றாக இருந்தேன். என்கூட இருப்பவர்களுக்கு அது தெரியும். அவர்கள் கம்பெனிக்கே என்னை படம் செய்ய சொன்னார்கள். என்னுடைய அறிவை வைத்து நான் எதுவுமே சொல்லக்கூடாது. " என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X