ஷாரூக் நடிக்கவிருந்த படத்தில் இப்போது அக்ஷய்!

By Staff

Akshay Kumar with Katrina Kaif
ஷாரூக்கானுக்காக பரா கான் உருவாக்கிய கதையில் இப்போது அக்ஷய் குமார் நடிப்பதுதான் பாலிவுட்டின் லேட்டஸ்ட் பரபரப்பு.

தீன் மார் கான் என்ற தலைப்பில் அடுத்த படத்தை ஆரம்பிக்கத் திட்டமிட்டிருந்தார் பரா கான். ஷாரூக்கானின் நெருங்கிய நண்பர் இவர். மே ஹூன் நா படத்தை எடுத்தவர்.

இடையில் என்ன நடந்ததோ... அந்தப் படத்தில் இப்போது நடிப்பவர் அக்ஷய் குமார்.

இதுபற்றிக் கேட்டால், "ஏன் நான் அந்தப் படத்துல நடிக்கிறதுல உங்களுக்கு ஏதேனும் பிரச்சினையா?" என்கிறார் தன் வழக்கமான பாணியில்.

"பரா கானும் நானும் நெருங்கிய நண்பர்கள். பராவின் கணவருடன் இணைந்து ஏற்கெனவே நான் படங்கள் செய்திருக்கிறேன். எனவே நாங்கள் சேர்ந்து படம் உருவாக்குவதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது. இந்தப் பாத்திரம் ஷாரூக்கானுக்காக உருவாக்கப்பட்டதுதான். அதை நான் மறுக்கவில்லை.

பாலிவுட்டில் 180 படங்கள் உருவாகின்றன. நாங்கள் இருப்பதோ 10 ஹீரோக்கள்தான். எனவே யார் வாய்ப்பு யாருக்குப் போனாலும், தொழில் பாதிக்காது" என்றார் கூலாக!.

மிக நெருக்கமான நண்பர்களாக இருந்த ஷாருக்-பரா இடையே மோதல் நடந்து வருவதாகக் கூறப்படும் நிலையில் அவரை நீக்கிவி்ட்டு அக்ஷயை கொண்டு வந்துள்ளார் பரா என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X