’அவதார்’ டைட்டில் என்னோடதுதான்.. ஆனா நடிக்க மட்டும் நோ சொல்லிட்டேன்: இப்டிச் சொல்றது யார் தெரியுமா?

ஜேம்ஸ் கேமரூன் கேட்டும் அவதார் படத்தில் நடிக்க மறுத்துவிட்டதாக இந்தி நடிகர் கோவிந்தா தெரிவித்துள்ளர்.

சென்னை: அவதார் படத்தின் டைட்டிலை தான் தான் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூனிடம் பரிந்துரைத்ததாக இந்தி நடிகர் கோவிந்தா கூறியுள்ளார்.

இந்தியில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருப்பர் கோவிந்தா. கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த ரங்கீலா ராஜா வசூல் மழை பொழிந்தது.

I reffered Avatar title to James Cameron, Says Govinda

இந்நிலையில் அவதார் படத்தில் நடிக்க ஜேம்ஸ் கேமரூன் தன்னை கேட்டதாகவும், ஆனால் அதை தான் மறுத்துவிட்டதாகவும் கோவிந்தா கூறியுள்ளார். மேலும் அந்த படத்தின் டைட்டிலை ஜேம்ஸ் கேமரூனிடம் தான் தான் பரிந்துரைத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், "அவதார் பட தலைப்பை நான் தான் ஜேம்ஸ் கேமரூனுக்கு பரிந்துரைத்தேன். அந்த படம் சூப்பர் ஹிட்டானது. இதை நான் அவரிடம் (ஜேம்ஸ் கேமரூனிடம்) ஏற்கனவே கூறியிருந்தேன்.

மேலும் அந்த படத்தை எடுக்க குறைந்தது ஏழு ஆண்டுகள் ஆகும் என சொன்னேன். அதற்கு ஜேம்ஸ் கேமரூன் கோபப்பட்டார். எப்படி அப்படி சொல்கிறீர்கள் எனக் கேட்டார். நீங்கள் நடக்க வாய்ப்பே இல்லாத ஒன்றைப்பற்றி யோசித்துக்கொண்டிருக்கிறீர்கள் என நான் கூறினேன்.

சாம் வொர்த்திங்டன் நடித்த ஜேக் சல்லி கதாபாத்திரத்திற்காக தான் ஜேம்ஸ் என்னை கேட்டார். சுமார் 410 நாட்கள் கால்ஷீட் தேவைப்பட்டது. அத்தனை நாட்கள் உடல் முழுவதும் பெயிண்ட் அடித்துக்கொண்டு நடிப்பதை யோசித்து பார்க்கவே முடியவில்லை. எனவே தான் நான் அந்த வாய்ப்பை நிராகரித்துவிட்டேன். அவரிடம் மன்னிப்பு கேட்டேன். ஆனால் நான் சொன்ன மாதிரியே படம் சூப்பர் ஹிட்டானது", என கோவிந்தா கூறினார்.

கோவிந்தா நடிக்க மறுப்பது புதுக்கதையல்ல. ஏற்கனவே தாள், சாதினி, தேவ்தாஸ் உள்பட நிறைய இந்தி படங்களை அவர் நிராகரித்துள்ளார். ஆனால் உலகளவில் வசூலில் மிகப்பெரிய சாதனை படத்தை அவதார் படத்தில் கோவிந்தா நடிக்க மறுத்த செய்தி தான் சினிமா வட்டாரத்தில் தலைப்பு செய்தியாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X