twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இலக்கியவாதிகளின் ஞானத்தையே நான் சினிமாவில் பிரதிபலிக்கிறேன்- கமல்ஹாசன்

    |

    கோவை: இலக்கியவாதிகளிடம் இருந்து தான் ஞானம் கிடைக்கிறது. சினிமாவில் நான் பிரதிபலிப்பது இலக்கியவாதிகளிடம் இருந்து பெற்றுக் கொண்டதைத் தான் என, நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்

    "இளைய தலைமுறை' இலக்கிய அமைப்பு சார்பில், கோவையில், ஹிந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகர் கமல் கலந்து கொண்டார். விழாவில் இலக்கியவாதிகளான கவிஞர் புவியரசு, கோவை ஞானி, தொ.பரமசிவம் ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

    இவ்விருதுகளை வழங்கி நடிகர் கமல்ஹாசன் பேசுகையில்,

    விருது பெற்ற இலக்கியவாதிகள் தாங்கள் எழுவது ஒன்றாகவும், வாழ்வது ஒன்றாகவும் இல்லாமல், தங்களின் கருத்துகளுக்கு ஏற்ப வாழ்ந்துகாட்டி வருகின்றனர். அவர்களுக்கு மரியாதை செலுத்தத் தவறினால், நாம் சுயமரியாதை இழந்தவர்களாவோம்.

    என்ன தவம் செய்தனை...

    என்ன தவம் செய்தனை...

    இதுபோன்ற அறிஞர்கள் இருப்பதே நமக்குப் பெருமை. இவர்களைப் போன்ற இலக்கியவாதிகள் பலர் இன்னமும் கண்டு கொள்ளப்படாமல் உள்ளனர். மக்களின் கருத்துக்களை எடுத்துக் கூறும் இவர்களுக்கு மக்களின் பாராட்டுக் கிடைக்க வேண்டும் என்பது தான் எனது ஆசை. இவர்களின் உழைப்பையும், ஈடுபாட்டையும் பார்க்கும் போது, எனது தேசம், எனது மொழி என்ற கர்வம் ஏற்படுகிறது.

    தங்கள் எழுத்தின் வலிமை தெரிந்து தான் இவர்கள் எழுதவே வந்தனர். இவர்களின் கருத்தை நாம் ஏற்பது மட்டுமே, இவர்களது உழைப்பின் வியர்வையைத் துடைக்கும் வகையில் இருக்கும்.

    என் ரசிகர்கள் மாறுபட்டவர்கள்...

    என் ரசிகர்கள் மாறுபட்டவர்கள்...

    சினிமாக்காரன் என்பதால், எனக்கு விசில் அடிக்கவும், கரவொலி எழுப்பவும், தோரணம் கட்டவும் தான் ரசிகர்கள் இருப்பதாக பலர் கருதுகின்றனர். எனது ரசிகர்கள் அப்படிப்பட்டவர்கள் இல்லை என்பதை கடந்த 30 வருடங்களாக நிரூபித்து வருகின்றனர்.

    வீட்டிலிருந்தே அரசியல்...

    வீட்டிலிருந்தே அரசியல்...

    நான் ஏன் அரசியலுக்கு வரவில்லை என்று கேட்கிறார்கள். அரசியல் என்பதை ஓட்டுக்காகச் செய்ய வேண்டியதில்லை. நாட்டைக் காக்க வேண்டிய கடமை வீட்டில் இருந்தே புறப்படுகிறது.

    வரலாறு ரொம்ப முக்கியம்...

    வரலாறு ரொம்ப முக்கியம்...

    நாட்டைக் காக்க வேண்டிய கடமை அனைவருக்கும் இருக்கிறது. அதற்கு நமது சரித்திரம், ஒதுக்கக்கப்பட்டவர்களின் கோபம் ஆகியவை குறித்து நாம் அறிந்திருக்க வேண்டும்.

    நான் ஒரு கண்ணாடி போல...

    நான் ஒரு கண்ணாடி போல...

    இலக்கியவாதிகளிடம் இருந்து தான் ஞானம் கிடைக்கிறது. சினிமாவில் நான் பிரதிபலிப்பது இலக்கியவாதிகளிடம் இருந்து பெற்றுக் கொண்டதைத் தான் என்றார் கமல்ஹாசன்.

    English summary
    While speaking in a function held at Coimbatore, Actor Kamalahasan said that he is reflecting the thoughts of literatures in cinema.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X