பற்றி எரியும் விஜய் பஞ்சாயத்து.. இதைத்தானே நயினார் சொன்னாரு.. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் ப்ளூ சட்டை மாறன்

சென்னை: தமிழ்நாட்டில் நேற்றிலிருந்து பற்றி எரிந்துகொண்டிருக்கும் விஷயமாக இருக்கிறது விஜய் விவாகரத்து. மனைவி சங்கீதா டைவர்ஸ் கேட்டதோடு மட்டுமின்றி தனது மனுவில் அவர் குறிப்பிட்டிருக்கும் விஷயங்கள் எல்லாம் பெரிய பூகம்பத்தையே ஏற்படுத்தியிருக்கிறது. விஜய்யின் ரசிகர்கள் அனைவருமே அதிர்ச்சியில் உறைந்துவிட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இந்நிலையில் வெந்த புண்ணில் வேலை பாய்ச்சியிருக்கிறார் ப்ளூ சட்டை மாறன்

தமிழ் சினிமாவின் ஃபேவரைட் ஜோடியாக வலம் வந்தவர்கள் விஜய், சங்கீதா. கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கும் மேலாக சேர்ந்து வாழ்ந்து ஒரு மகனையும், மகளையும் பெற்றிருக்கிறார்கள். பிள்ளைகள் இரண்டு பேருக்கும் இன்னும் சில வருடங்களில் திருமணம் செய்துகொடுத்துவிடலாம். இப்படிப்பட்ட சூழலில் அவரது மனைவி சங்கீதா ஒட்டுமொத்த விஜய் ரசிகர்களுக்கு மட்டுமின்றி தமிழ்நாட்டுக்குமே பெரிய ஷாக்கை நேற்று கொடுத்திருக்கிறார்.

I Said This Earlier Blue Sattai Maran Tweet on Vijay Divorce Goes Viral
Photo Credit:

விவாகரத்து வழக்கு: செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்திருந்த விவாகரத்து மனுவில், "நடிகை ஒருவருடன் விஜய் திருமணத்தை மீறிய உறவில் இருந்தார். அது 2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் எனக்கு தெரியவந்தது. நான் அதனை கண்டுபிடித்த பிறகும் அந்த நடிகையுடன் இரக்கமே இல்லாமல் உறவினை தொடர்ந்தார். அந்த நடிகையுடனான உறவை முறித்துக்கொள்வதாகவும் அவர் உறுதி கொடுத்தார். ஆனால் அவரது நடவடிக்கையில் எந்த மாற்றமும் தென்படவில்லை.

Also Read
திரிஷா காதலிப்பது விஜய்யை அல்ல.. அந்த பெரிய வீட்டு மருமகளாகியிருக்கணும்.. சுசித்ரா என்னென்னம்மோ சொல்றாங்க
திரிஷா காதலிப்பது விஜய்யை அல்ல.. அந்த பெரிய வீட்டு மருமகளாகியிருக்கணும்.. சுசித்ரா என்னென்னம்மோ சொல்றாங்க

மனதளவில் பாதிப்பு: அந்தத் திருமணத்தை மீறிய உறவினால் நான் மனதளவில் ரொம்பவே பாதிக்கப்பட்டேன். நான் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்தேன். கடந்த ஐந்து ஆண்டுகளாக மனதளவிலும், உணர்வுப்பூர்வமாகவும் அவர் என்னை பிரிந்துதான் வாழ்கிறார். எனது கணவருடன் வெளிநாடுகளுக்கு அந்த நடிகை சென்றார். அப்போது அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் நடிகை பகிர்ந்திருந்தார். அது எனக்கும், எனது குழந்தைகளுக்கும், குடும்பத்துக்கும் பெரிய அவமானத்தை ஏற்படுத்தியது" என பல விஷயங்களை போட்டு உடைத்திருந்தார்.

ப்ளூ சட்டை மாறன் ட்வீட்: இந்த விஷயத்தை பார்த்த ரசிகர்கள் அனைவருமே அதிர்ச்சியில் உறைந்திருக்கிறார்கள். இதற்கு பின்னணியில் நிச்சயம் அரசியல் சதி இருப்பதாகவும் அவர்கள் கூறிவருகிறார்கள். இந்நிலையில் பிரபல திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில், "நயினார்: இதைத்தானேடா நான் கொஞ்ச நாளைக்கு முன்னால் சொன்னேன்? அதற்கு என்னை ரவுண்டு கட்டி அடித்து மன்னிப்பெல்லாம் கேட்க வைத்தீர்களே.. ஏன் டா இப்படி?" என குறிபிட்டிருக்கிறார்.

நயினார் பேச்சு: அவரது இந்த ட்வீட் விஜய் ரசிகர்களுக்கு வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல் இருக்கிறது. முன்னதாக, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சில வாரங்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம், 'விஜய் நடிகையின் வீட்டில் இருக்கிறார். அந்த நடிகையின் வீட்டிலிருந்து அவர் வெளியே வந்தால்தான் அரசியலில் அவரால் நடமாட முடியும்' என கூறியிருந்தார். அதற்கு அனைவருமே, அரசியலில் ஏன் விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கையையும், அந்த நடிகையையும் இழுக்க வேண்டும் என கண்டனங்கள் தெரிவிக்க; நயினார் மன்னிப்பு கேட்டது நினைவுகூரத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X