என் மகன் ஆப்ராமில் அடுத்த ஷாருக்கை பார்க்கிறேன்: சொல்கிறார் ஷாருக்கான்

By Siva

மும்பை: அடுத்த ஷாருக்கானை தனது இளைய மகன் ஆப்ராமில் பார்ப்பதாக பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தெரிவித்துள்ளார்.

சென்னை எக்ஸ்பிரஸ் வெற்றியால் குஷியாக இருக்கும் ஷாருக்கான் தனது அடுத்த பட வேலைகளை ஆரம்பித்துவிட்டார். அவர் மீண்டும் தீபிகா படுகோனேவுடன் சேர்ந்து ஃபரா கான் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

முன்னதாக ஃபரா கான் இயக்கத்தில் ஷாருக்கான், தீபிகா நடித்த ஓம் சாந்தி ஓம் சூப்பர் ஹிட்டானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஷாருக்கிடம் இளம் தலைமுறை நடிகர்களில் அடுத்த ஷாருக்கான் யார் என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் என்ன பதில் அளித்தார் என்று பார்ப்போம்.

அடுத்த ஷாருக்

அடுத்த ஷாருக்

எனது இளைய மகன் ஆப்ராமில் அடுத்த ஷாருக்கானை பார்க்கிறேன். ஆப்ராம் கைக்குழந்தையாக இருப்பதால் அவன் வளர்ந்து வரும் வரை காத்திருக்க வேண்டும் என்றார் ஷாருக்.

சின்ன சின்ன விஷயங்கள்

சின்ன சின்ன விஷயங்கள்

நடிக்க வந்து 22 ஆண்டுகள் ஆகிவிட்டது. பெரிய படங்கள், விருதுகள் போன்ற பெரிய விஷயங்களை அடைய ஒவ்வொரு வருடமும் நாம் ஓடிக் கொண்டிருக்கிறோம். இதில் சின்ன சின்ன விஷயங்களை மிஸ் பண்ணிவிடுகிறோம். அதனால் இனி சின்ன சின்ன விஷயங்களில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளேன் என்று ஷாருக் தெரிவித்தார்.

குழந்தைகள்

குழந்தைகள்

இந்த ஆண்டு எனது குழந்தைகளுடன் நேரத்தை செலவிட விரும்புகிறேன். அவர்கள் பெரியவர்களாகிக் கொண்டிருக்கின்றனர். அவரவர் உலகில் பிசியாக உள்ளனர். அந்த உலகில் நுழைய விரும்புகிறேன். அதனால் இந்த ஆண்டை சின்ன சின்ன சந்தோஷங்களுக்காக செலவிட உள்ளேன் என்று ஷாருக்கான் கூறினார்.

சாதனை செய்ய இன்னும் இருக்கு

சாதனை செய்ய இன்னும் இருக்கு

நடிப்பை பொருத்த வரையில் நான் சாதிக்க வேண்டியது எவ்வளோ உள்ளது. ஒவ்வொரு படத்திலும் முந்தைய படத்தைக் காட்டிலும் சிறப்பாக நடிக்க முயற்சிக்கிறேன். இதை என் கடைசி மூச்சு உள்ள வரை செய்வேன் என்றார் ஷாருக்கான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X