நானும் ஜோவும் இன்னும் டேட்டிங் போகிறோம்: வெட்கப்படும் சூர்யா
சென்னை: திருமணாகி 2 குழந்தைகள் பெற்ற பிறகும் சூர்யா தனது மனைவி ஜோதிகாவுடன் டேட்டிங் போகிறாராம்.
சூர்யாவும், ஜோதிகாவும் காதலித்து வந்தது அனைவருக்கும் தெரியும். இதோ கல்யாணம் அதே கல்யாணம் என்று இருவரும் ஒருவகையாக கடந்த 2006ம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டனர். சூர்யா-ஜோதிகா ஜோடி பார்க்க க்யூட் என்று பெயர் வாங்கிய ஜோடியாகும்.
அவர்களுக்கு தியா என்ற மகளும், தேவ் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் திருமண வாழ்க்கை குறித்து சூர்யா வெளிப்படையாக பேசியுள்ளார்.

தினமும் ஒரு புது ஜோ
தினமும் நான் ஒரு புது ஜோவை கண்டுபிடிக்கிறேன். வாழ்க்கை சுவாரஸ்யமாகச் செல்கிறது என்றார் சூர்யா.

இப்பவும் டேட்டிங் போகிறோம்
திருமணமாகி இத்தனை ஆண்டுகள் ஆகியும் 2 குழந்தைகள் பெற்ற பிறகும் நான் இன்னும் ஜோவுடன் டேட்டிங் போகிறேன் என்று கூறி முகம் சிவந்தார் சிங்கம்.

தேவ் அப்படியே அம்மா மாதிரி
தியா தன்னைப் போன்று உள்ளதாக தெரிவித்த சூர்யா மகன் தேவ் அப்படியே அம்மாவின் ஜெராக்ஸ் என்றார்.

குழந்தைகளுடன் விளையாடப் பிடிக்கும்
குழந்தைகளுக்கு கதைகள் வாசிப்பது, அவர்களை பீச், பார்க்கிற்கு வாக்கிங் கூட்டிச் செல்வது மற்றும் மொட்டை மாடியில் அவர்களுடன் விளையாடப் பிடிக்கும் என்றார் சூர்யா.


Click it and Unblock the Notifications











