மத்தவங்க கூட நடிக்கும் போது எனக்கு பயமா இருக்கும்.. அருள்நிதி சொன்ன ஷூட்டிங் ஸ்பாட் ரகசியம்!

சென்னை: எப்போதும் க்ரைம் திரில்லர் கதைகளில் விரும்பி நடித்து வருபவர் நடிகர் அருள்நிதி.

ஜூலை 22 ஆம் தேதி அருள்நிதி பிறந்த நாளன்று தேஜாவு திரைப்படம் வெளியானது.

தேஜாவு படத்தை பற்றி பல சுவாரசியமான தகவல்களையும், தனது அனுபவத்தையும் பகிர்ந்து உள்ளார் நடிகர் அருள்நிதி.

க்ரைம் திரில்லர் நாயகன்

க்ரைம் திரில்லர் நாயகன்

வம்சம், உதயன், மௌனகுரு, ஆறாது சினம், களத்தில் சந்திப்போம், போன்ற பல படங்களில் நடித்து வெற்றி நாயகனாக இருப்பவர் தான் நடிகர் அருள்நிதி. மற்ற கதைகளை விட க்ரைம் திரில்லர் கதைகளில் நடிப்பதில் கவனம் செலுத்தி வரும் நடிகர் அருள்நிதி சமீபத்தில் டி பிளாக் என்ற படத்தில் நடித்திருந்தார். தற்போது தேஜாவு என்ற திரைப்படம் வெளிவந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

விசாரணை அதிகாரியாக அருள்நிதி

விசாரணை அதிகாரியாக அருள்நிதி

தேஜாவு படமும் திரில்லர் படமாகவே அமைந்துள்ளது. இந்த படத்தில் அருள் நிதியுடன் இணைந்து மதுபாலா போன்ற பலரும் நடித்துள்ளனர். அருள்நிதியின் பிறந்தநாள் அன்று வெளியான இந்த படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் அச்சுதகுமார் எழுதும் கதைகளில் நடப்பது அனைத்தும் நிஜத்தில் எப்படி நடக்கிறது என்பதை கண்டுபிடிக்கும் விசாரணை அதிகாரியாக நடித்துள்ளார் நடிகர் அருள்நிதி.

நீண்ட நாட்களுக்கு பிறகு மதுபாலா

நீண்ட நாட்களுக்கு பிறகு மதுபாலா

தேஜாவு படத்தில் டிஜிபியாக ஆஷா என்னும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நடிகை மதுபாலா. ரோஜா, ஜென்டில்மேன் போன்ற படங்களில் நடித்து பிரபலமான நடிகை மதுபாலா இந்த படத்தின் மூலம் ரசிகர்களை மீண்டும் கவர்ந்து உள்ளார். விறுவிறுப்பான தேஜாவு திரைப்படம் பற்றிய சுவாரஸ்யத்தையும், ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த விஷயங்களையும் கூறியுள்ளார் நடிகர் அருள்நிதி,

அசராமல் பதில் சொன்ன அருள்நிதி

அசராமல் பதில் சொன்ன அருள்நிதி

ஒரு சீன் நடிக்கும் பொழுது, சக நடிகர்களுடன் நடிக்கும் உங்களுக்கு பயம் வருமா என்று கேட்ட கேள்விக்கு, அசராமல் பதிலளித்துள்ளார் நடிகர் அருள்நிதி. கேள்விக்கு அருள்நிதி கூறிய பதில்," அந்தந்த சிட்டுவேஷனுக்கு டைரக்டர் என்ன சொல்கிறாரோ அதை அந்த இடத்தில் நான் கரெக்டாக செய்து விடுவேன் , பல நடிகர்கள் நடிக்கும் பொழுது பயம் கண்டிப்பாக இருக்கும், ஆனால் டைரக்டர் சொல்வதை நான் முழுமையாக ஏற்று நடித்து முடித்துவிடுவேன் என்று அசால்டாக பதில் அளித்துள்ளார் நடிகர் அருள்நிதி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X