இயக்குனராக வேண்டியவனை நடிகனாக்கிட்டாங்க: நடிகர் நிரந்த்!

இயக்குனராக வேண்டும் என ஆசைப்பட்ட தன்னை நடிகராக்கிவிட்டனர் என நடிகர் நிரந்த் கூறியுள்ளார்.

சென்னை: தமிழ் சினிமாவில் தடம் பதிக்க ஆசை என்று 'சந்தோஷத்தில் கலவரம் 'படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள நடிகர் நிரந்த் கூறியுள்ளார்.

பெங்களூருவை சேர்ந்தவர் நடிகர் நிரந்த். சமீபத்தில் வெளியான 'சந்தோஷத்தில் கலவரம்' படம் மூலம் தமிழில் நாயகனாக அறிமுகமாகி இருக்கிறார்.

இவர் ஏற்கெனவே கன்னடத்தில் 'லைப் பூ சூப்பர் 'என்கிற கன்னட படத்தில் நடித்துள்ளார். இயக்குநர் கனவுடன் சில படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவரை இந்த படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகப்படுத்தியவர் தயாரிப்பாளர் திம்மா ரெட்டி.

கன்னட படம் கார்ணி

கன்னட படம் கார்ணி

இரண்டாவது படமாக நிரந்த் நடித்த கன்னடப் படம் 'கார்ணி'. இந்த படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் தான் தமிழ் சினிமாவில் தடம் பதிக்க வேண்டும் என்கிறார் நிராந்த்.

தமிழ் தடம் பதிக்க ஆசை

தமிழ் தடம் பதிக்க ஆசை

இதுகுறித்து அவர் கூறியதாவது, "தமிழ்ச்சினிமா ரசிகர்கள் தோற்றத்தை விட திறமையை வரவேற்பவர்கள் ; ஆராதிப்பவர்கள் .அந்த நம்பிக்கையில்தான் நான் தமிழில் நடிக்க சந்தோஷமாக சம்மதித்தேன். திறமைக்கு மரியாதை தரும் தமிழில் தடம் பதிக்க எனக்கு ஆசை.

இயக்குனர் கனவு

இயக்குனர் கனவு

நான் இயக்குனர் ஆக வேண்டும் என்றுதான் சினிமாவுக்கு வந்தேன். நடிக்க வாய்ப்புகள் வந்தன. இதை விட மாட்டேன். எனக்கு எந்த வகையிலாவது சினிமாவில் இருக்க வேண்டும் என்பது தான் என் ஆசை.

நடிகனாக மட்டுமே அறியப்பட வேண்டும்

நடிகனாக மட்டுமே அறியப்பட வேண்டும்

நடிப்பைப் பொறுத்தவரை சினிமாவில் நான் ஒரு கதாநாயகன் என்றோ நட்சத்திரம் என்றோ நினைக்க மாட் டேன். நான் ஒரு நடிகன். அதுவும் இயக்குநரின் நடிகன் என்றிருக்கவே விருப்பம்.

அனைத்துமே சகோதர மொழிகள் தான்

அனைத்துமே சகோதர மொழிகள் தான்

தென்னக மொழிகள் அனைத்துமே சகோதர மொழிகள்தான் எனவே தமிழோ தெலுங்கோ கன்னடமோ மலையாளமோ கவலையில்லை. நல்லவனோ கெட்டவனோ கவலையில்லை கதாபாத்திரம் மட்டுமே தனக்கு முக்கியம்", என்கிறார் நிராந்த்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X