எனக்கு விஜய் அண்ணா இடம் தான் வேண்டும்: சொல்கிறார் ஜெய்

By Siva

சென்னை: எனக்கு திரை உலகில் விஜய் அண்ணாவின் இடம் வேண்டும் என்று நடிகர் ஜெய் தெரிவித்துள்ளார்.

கோலிவுட்டில் வேகமாக இல்லாவிட்டாலும் நிதானமாக முன்னேறி வருபவர் நடிகர் ஜெய். முதலில் நடிகை அஞ்சலியுடன் கிசுகிசுக்கப்பட்ட அவர் பிறகு நஸ்ரியாவை காதலிப்பதாக செய்திகள் வெளியாகின. நஸ்ரியாவுக்கு திருமணம் நிச்சயமானதும் அந்த கிசுகிசுக்கள் அடங்கின.

இந்நிலையில் அவர் நடித்த வடகறி படம் அண்மையில் ரிலீஸானது.

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

வடகறி படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதை நினைத்து மகிழ்ச்சியில் உள்ளார் ஜெய். இதில் அவர் தன்னுடன் சுப்பிரமணியபுரம் படத்தில் ஜோடியாக நடித்த சுவாதியுடன் மீண்டும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.

அஜீத், விஜய்

அஜீத், விஜய்

அஜீத், விஜய், சூர்யா மற்றும் விக்ரம் ஆகியோரின் வரிசையில் சிம்பு, தனுஷ், ஜீவா, ஆர்யா ஆகியோர் டாப் இடங்களில் உள்ளனர் என்றார் ஜெய்.

நானும்

நானும்

சிம்பு, தனுஷ், ஜீவா, ஆர்யா போன்று நானும் முதல் 5 நடிகர்களில் ஒருவராக வேண்டும் என்று ஜெய் தனது ஆசையை வெளிப்படுத்தினார்.

விஜய் அண்ணா

விஜய் அண்ணா

நான் எந்த இடத்தில் தற்போது உள்ளேன் என்று வியக்கிறேன். பளிச்சென்று சொல்ல வேண்டும் என்றால் எனக்கு விஜய் அண்ணாவின் இடம் தான் வேண்டும் என்று ஜெய் கூறினார்.

பகவதி

பகவதி

2002ம் ஆண்டில் விஜய், ரீமா சென் நடிப்பில் வெளியான பகவதி படத்தில் விஜய்யின் பாசக்கார தம்பியாக நடித்திருந்தார் ஜெய். ஜெய்க்கு தமிழில் முதல் படம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X