என்னை சினிமாவை விட்டு விரட்டிடுவாங்களோன்னு பயந்தேன்: சூர்யா

By Siva

சென்னை: என்னை சினிமாவை விட்டு தூக்கி எறிந்துவிடுவார்களோ என்று பயந்தேன் என்று நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.

சூர்யா தனது நண்பர் விஜய் நடித்த நேருக்கு நேர் படத்தில் அறிமுகமானார். அவருக்கு ஜோடியாக சிம்ரன் நடித்திருந்தார். அந்த படத்தில் வரும் எங்கெங்கே எங்கெங்கே என்ற பாடலை சூர்யா ஓடி, ஓடியே ஓட்டியிருப்பார்.

அதன் பிறகு ஒரு சில படங்களில் பாடல் காட்சி வந்தால் நடந்து, ஓடி நாட்களை கழித்தார். பின்னர் ஒரு வழியாக டான்ஸ் ஆடத் துவங்கினார். மேலும் நடிப்பிலும் கலக்கத் துவங்கினார். இந்நிலையில் சூர்யா தனது திரையுலக பயணம் குறித்து மனம் திறந்துள்ளார்.

நடிக்கத் தெரியாது, டான்ஸ் தெரியாது

நடிக்கத் தெரியாது, டான்ஸ் தெரியாது

தான் நடிக்க வந்த புதிதில் தனக்கு நடிக்கத் தெரியாது என்றும், தன்னம்பிக்கையோ, ஞாபக சக்தியோ இல்லை என்றும் சூர்யா தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு டான்ஸ் ஆடவோ, ஸ்டைலாக சண்டை போடவோ தெரியாது என்றும் தெரிவித்துள்ளார்.

விரட்டிவிட்டுவார்களோ என்று பயந்தேன்

விரட்டிவிட்டுவார்களோ என்று பயந்தேன்

ஆரம்ப காலத்தில் தன்னை சினிமாவை விட்டு விரட்டிவிட்டுவிடுவார்களோ என்று சூர்யா அஞ்சியுள்ளார்.

சின்சியாரிட்டி தான் என் பலம்

சின்சியாரிட்டி தான் என் பலம்

எதுவும் தெரியாமல் நடிக்க வந்தாலும் அனைத்தையும் கற்றுக் கொள்ளத் தயாராக இருந்தேன் என்றார் சூர்யா. அவரது அர்ப்பணிப்பு தான் பெரிய பலம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ரகுவரன் கொடுத்த அட்வைஸ்

ரகுவரன் கொடுத்த அட்வைஸ்

சூர்யாவின் திரையுலக பயணம் அவ்வளவாக பிக்கப்பாகாதபோது மறைந்த நடிகர் ரகுவரன் தான் அவருக்கு புத்திமதி கூறியுள்ளார். முதலில் சிவகுமாரின் மகன் என்பதில் இருந்து வெளியே வந்து உனக்கென்று ஒரு பெயர் எடு என்று ரகுவரன் அறிவரை கூறினாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X