»   »  விஜய்யை இயக்கப் போவது எப்போது?: தனுஷ் பதில்

விஜய்யை இயக்கப் போவது எப்போது?: தனுஷ் பதில்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இளைய தளபதி விஜய்யை வைத்து தான் படம் எடுக்கப் போவது பற்றி தனுஷ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

தனுஷ் நடிப்பில் வெளியான அனேகன் வசூல் வேட்டை நடத்திக் கொண்டிருக்கிறது. இதனால் தனுஷ் மகிழ்ச்சியில் உள்ளார். முன்னதாக அவர் ட்விட்டரில் ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.

அந்த உரையாடலில் சில சுவாரஸ்யங்கள் உங்களுக்காக,

இரண்டு ஹீரோ

இரண்டு ஹீரோ

இரண்டு ஹீரோ படங்களில் எப்பொழுது நடிப்பீர்கள். அப்படி நடித்தால் யாருடன் நடிப்பீர்கள் என்று ஒருவர் கேட்டார். அதற்கு தனுஷ் கூறுகையில், நல்ல கதை அமைந்தால் நிச்சயம் நடிப்பேன். சிம்பு, சிவகார்த்திகேயன் மற்றும் விஜய் சேதுபதியுடன் சேர்ந்து நடிக்க ஆசை என்றார்.

சிம்பு

சிம்பு

ஆப்போனன்டா ஆளே இல்ல சோலோ ஆகிட்டேன் என்று சிம்புவை தான் கூறியுள்ளீர்களா என்று ஒருவர் கேட்டதற்கு தனுஷ் கூறுகையில், நான் யாரையும் குறிப்பிட்டு கூறவில்லை. அது கதைப்படி வரும் வசனம். நானோ, கே.வி. ஆனந்த் சாரோ படத்தை யாரையாவது தாக்க பயன்படுத்த மாட்டோம் என்றார்.

விஜய்

விஜய்

எப்பொழுது படம் இயக்குவீர்கள், இயக்கினால் எங்கள் விஜய் அண்ணாவை இயக்குங்கள் என்று ஒருவர் கூற, தனுஷோ- இயக்குனராக நான் தயார் என்று தோன்றும்போது விஜய் சாருக்கு என் கதை பிடித்து டேட்ஸ் கொடுத்தால் ஏன் இயக்க மாட்டேனாம் என்றார்.

அஜீத்

அஜீத்

அஜீத்தை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று ஒருவர் கேட்டதற்கு, ஒரு நடிகராக, மனிதராக அவர் மீது அதிகம் மரியாதை வைத்துள்ளேன் என்றார் தனுஷ்.

ஷமிதாப்

ஷமிதாப்

நீங்கள் நடித்ததிலேயே மிகவும் கடினமான கதாபாத்திரம் எது என்று ஒருவர் கேட்டற்கு, ஷமிதாப், புதுக்கோட்டை, ஆடுகளம், மரியான் என பதில் அளித்தார் தனுஷ்.

English summary
Dhanush is ready to take director avatar when he is ready. He is eager to direct Vijay when Ilayathalapathy likes his script.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil