"அர்ஜுன் ரெட்டி ரீமேக்கில் என் மகனுக்குப் பதிலாக நானே நடிப்பேன்" - ஆச்சரியப்படுத்திய விக்ரம்

By Vignesh Selvaraj

Recommended Video

தன் அதிரடி பேட்டியின் மூலம் மக்களுக்கு ஷாக் கொடுத்த விக்ரம்

சென்னை : நடிகர் விக்ரமின் மகன் துருவ், பாலா இயக்கத்தில் உருவாகும் 'வர்மா' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகிறார்.

தெலுங்கில் ஹிட் ஆன 'அர்ஜுன் ரெட்டி' படத்தின் ரீமேக்கான இதில் தன் மகன் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை என்றால் நான் நடித்திருப்பேன் என விக்ரம் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

50 வயதிற்கு மேல் ஆனாலும் இவ்வளவு இளமையான தோற்றம் தேவைப்படும் படத்திலும் தன்னால் நடிக்கமுடியும் என விக்ரம் கூறியுள்ளது பலருக்கும் ஆச்சர்யமளித்துள்ளது.

விக்ரம்

விக்ரம்

விக்ரம் நடிப்பில் பொங்கலுக்கு வெளியான படம் 'ஸ்கெட்ச்'. ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளிவந்த 'ஸ்கெட்ச்' படம் தியேட்டரில் சுமாராக ஓடி வருகிறது. இந்த படத்தையடுத்து 'சாமி 2', 'துருவநட்சத்திரம்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார் விக்ரம்.

அர்ஜுன் ரெட்டி

அர்ஜுன் ரெட்டி

விக்ரமின் மகன் துருவ், பாலா இயக்கும் வர்மா படத்தில் நடிக்கிறார். தெலுங்கில் வெளியான அர்ஜூன்ரெட்டி படத்தின் ரீமேக்கில் இந்த படம் உருவாகிறது. இந்தப் படம் குறித்து விக்ரம் கூறும்போது, "அர்ஜூன் ரெட்டி கதைக்கு என் மகன் துருவ் ரொம்ப கச்சிதமாகப் பொருந்துவார்.

நானே நடிப்பேன்

நானே நடிப்பேன்

துருவ்வை அந்தக் கதாபாத்திரத்தில் பார்ப்பதற்கு ஒரு தந்தையாக நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். அதேசமயம் அர்ஜுன் ரெட்டி தமிழ் ரீமேக்கில் என் மகன் துருவ் நடிக்கவில்லையென்றால் நான் நடிப்பேன்.

இப்போதும் என்னால் நடிக்க முடியும்

இப்போதும் என்னால் நடிக்க முடியும்

வயது ஒரு பிரச்சினையே இல்லை. இப்போதும் என்னால் இளமையான காதல் கதைகளில் நடிக்க முடியும் எனக் கூறியிருக்கிறார் விக்ரம். 50 வயதிற்கு மேல் ஆனாலும் இவ்வளவு இளமையான தோற்றம் தேவைப்படும் படத்திலும் தன்னால் நடிக்கமுடியும் என விக்ரம் கூறியுள்ளது பலருக்கும் ஆச்சர்யமளித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X