டிப்ரஷன் வந்தா இப்படி தான் செய்வேன்... விஜய் சேதுபதி ஓபன் டாக்

சென்னை: தென்னிந்திய சினிமாவையும் கடந்து இப்பொழுது பாலிவுட்டிலும் கால் தடத்தை பதித்து வருகிறார் நடிகர் விஜய் சேதுபதி

முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் அதே சமயம் வில்லன் கதாபாத்திரங்களிலும் நடித்து பட்டையை கிளப்பிய கொண்டுள்ளார்

இந்த நிலையில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றின் பேட்டியில் பேசிய விஜய் சேதுபதி டிப்ரஷன் வந்த சரக்கு அடிச்சிட்டு தூங்கிடுவேன் என கூறியுள்ளார்.

வித்தியாசமான கதாபாத்திரங்களில்

வித்தியாசமான கதாபாத்திரங்களில்

ஒரே மாதிரியான மேனரிசத்தை காட்டாமல் ஒவ்வொரு படத்திற்கும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. தென்மேற்கு பருவக்காற்று மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான விஜய் சேதுபதி அதற்கு முன்பாகவே பல படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர். வெண்ணிலா கபடிக்குழு, நான் மகான் அல்ல,பலே பாண்டியா உள்ளிட்ட பல படங்களில் சிறுசிறு வேடங்களில் விஜய் சேதுபதி நடித்துள்ளார்.

ஹீரோ இமேஜ் இல்லாமல்

ஹீரோ இமேஜ் இல்லாமல்

பீட்சா,நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்,சூது கவ்வும் என விஜய் சேதுபதி ஆரம்பமே அதிரடியாக தொடர் வெற்றி படங்களை கொடுத்தவர். ஒவ்வொரு படத்திற்கும் வித்தியாசம் காட்டி நடிக்கும் விஜய் சேதுபதி ஹீரோ என்ற இமேஜ் இல்லாமல் எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் துணிந்து நடிக்கக் கூடியவர்

வில்லன் கதாபாத்திரத்தில்

வில்லன் கதாபாத்திரத்தில்

முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் பொழுது வில்லன் கதாபாத்திரத்திலும் குணச்சித்திர வேடங்களிலும் இவர் நடிப்பது ரசிகர்களுக்கு மீண்டும் வியப்பை அளிக்கிறது. அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகி பிரமாண்ட வெற்றிபெற்ற மாஸ்டர் உள்ள பவானி என்ற கதாபாத்திரத்தில் வில்லனாக மிரட்டி இருந்தார்.

பாலிவுட்டிலும் வரவேற்பு

பாலிவுட்டிலும் வரவேற்பு

தமிழைத் தொடர்ந்து மலையாளம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு இருக்க இப்பொழுது பாலிவுட்டிலும் கால் தடத்தை பதிக்கிறார். ஏற்கனவே காந்தி டாக்ஸ் மற்றும் மும்பை கார் உள்ளிட்ட படங்களில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். இப்பொழுது தி பேமிலி மேன் வெப் சீரிஸை இயக்கிய டீகே மற்றும் ராஜ் இயக்கத்தில் பிரமாண்ட வெப் சீரிஸில் ஷாகித் கபூருடன் இணைந்து நடிக்கிறார். மேலும் காத்ரீனா கைஃப்புக்கு ஜோடியாக புதிய திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

Recommended Video

ஒன்று சேர்ந்த Biggboss பிரபலங்கள் | Thotta | Rio Raj | Ramya Pandian | Tamil Filmibeat
சரக்கு அடிச்சுட்டு படுத்து தூங்கிடுவேன்

சரக்கு அடிச்சுட்டு படுத்து தூங்கிடுவேன்

இவ்வாறு இந்திய அளவில் புகழ்பெற்ற நடிகராக உயர்ந்து இருக்கும் விஜய் சேதுபதி தனியார் யூடியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் இந்த டிப்ரஷன் வந்தா என்ன செய்வீங்க என கேட்கப்பட்ட கேள்விக்கு, முதலில் படுத்து தூங்கிவிடுவேன் இல்லையென்றால் புகை பிடிப்பேன் அப்புறம் சரக்கு அடிச்சுட்டு படுத்து தூங்கிடுவேன் என செம ஜாலியாக அந்த பேட்டியில் பேசியுள்ளார்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X