திட்டமிட்டபடி டிடிஎச்சில் விஸ்வரூபம் வரும், யாருக்கும் அஞ்ச மாட்டேன்- கமல்

சென்னையில், டிஜிபி அலுவலகத்திற்கு இன்று வந்த கமல்ஹாசன் அங்கு புகார் ஒன்றைக் கொடுத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
நேர்மையான முறையில் நான் தொழில் செய்வதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். விஸ்வரூபம் படம் திட்டமிட்டப்படி டி.டி.எச்.சில் ஒளிபரப்பாகும். மறுநாளில் 200-க்கும் மேற்பட்ட தியேட்டர்களிலும் அந்த படம் திரையிடப்படும். தியேட்டர்கள் எண்ணிக்கை மேலும் அதிகமாகலாம்.
டி.டி.எச்.சில் விஸ்வரூபம் படம் ஒளிபரப்புவதை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மின்சாரத்தை தடை செய்வோம் என்று சிலர் மிரட்டல் விடுத்துள்ளனர். அவர்களது பெயர் விவரத்தை புகார் மனுவில் கூறி உள்ளேன். புகாரில் சினிமாக்காரர்களின் பெயர்களும் இருக்கலாம். நானும் கூட சினிமாக்காரன்தான்.
இது தொடர்பாக உள்துறை செயலாளரையும் சந்தித்து பேச உள்ளேன். மேலும் விஸ்வரூபம் படம் வெளியாகும் போது தியேட்டர்கள் மற்றும் படத்துக்கு பாதுகாப்பு அளிக்க கேட்டுள்ளேன்.
யாருடைய மிரட்டலுக்கும் நான் அஞ்சப் போவதில்லை, பயப்படவும் மாட்டேன் என்றார் கமல்ஹாசன்.


Click it and Unblock the Notifications











