twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இனி நான் 'அந்த' ரிஸ்க் எடுக்க மாட்டேன், கெரியரை பாதிக்கும்ல: பிரபாஸ் ஓபன் டாக்

    By Siva
    |

    Recommended Video

    இனி அந்த தப்ப நான் செய்ய மாட்டேன்- நடிகர் பிரபாஸ்- வீடியோ

    ஹைதராபாத்: இனி நான் அந்த ரிஸ்கை எடுக்க மாட்டேன் என்று நடிகர் பிரபாஸ் தெரிவித்துள்ளார்.

    ராஜமவுலி இயக்கத்தில் பாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகிய படங்களில் நடிக்க 5 ஆண்டுகளை ஒதுக்கினார் பிரபாஸ். அந்த 5 ஆண்டுகளில் அவர் வேறு எந்த படங்களிலும் நடிக்கவில்லை.

    இந்நிலையில் இது குறித்து பிரபாஸ் கூறியிருப்பதாவது,

    ஆண்டுகள்

    ஆண்டுகள்

    பாகுபலி போன்று இனி எந்த படத்திற்காகவும் இத்தனை ஆண்டுகளை நான் ஒதுக்குவேன் என்று தோன்றவில்லை. இனி இது போன்ற ரிஸ்க் எடுத்தால் அது என் கெரியரை பாதிக்கும்.

    நடிகர்கள்

    நடிகர்கள்

    நடிகர்களுக்கு குறிப்பிட்ட காலம் தான் மார்க்கெட் இருக்கும். இனி நான் எந்த படத்திற்கும் 5 ஆண்டுகள் ஒதுக்க முடியாது. அப்படியே ஒதுக்கினாலும் அதோடு சேர்த்து வேறு படங்களிலும் நடிப்பேன். வயதையும் கருத்தில்கொள்ள வேண்டியுள்ளது.

    அர்ப்பணிப்பு

    அர்ப்பணிப்பு

    பாகுபலி போன்ற பட வாய்ப்பு வாழ்க்கையில் ஒரு முறை தான் வரும். அதற்கு கூடுதல் அர்ப்பணிப்பு தேவைப்பட்டது. நாடு முழுவதும் உள்ள ரசிகர்களுக்கு ஏற்றது போன்ற படங்களை தேர்வு செய்து நடிக்க முயற்சி செய்கிறேன்.

    விருப்பம்

    விருப்பம்

    பாலிவுட் படங்களில் நடிக்க விருப்பம் உள்ளது. இந்தி மட்டும் அல்ல பஞ்சாபி உள்பட எந்த மொழி படங்களிலும் நடிக்க நான் ரெடி. ஸ்க்ரிப்ட் நன்றாக இருந்தால் எந்த மொழியிலும் நடிப்பேன். மொழி எனக்கு முக்கியம் அல்ல என்றார் பிரபாஸ்.

    English summary
    He lived and breathed Baahubali for five years, a role that established him as India's latest heartthrob but Prabhas says he will not be able to devote so much time in a future project. The 38-year-old actor believes as a performer he has a shelf-life and taking such a risk again can have an adverse effect on his career.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X