என்னுடைய ரசிகர்களை ஏமாற்ற மாட்டேன் – கமல் ஹாசன்!

எல்லோரும் மிக புத்திசாலிகளாக இருக்கிறார்கள், யாரையும் ஏமாற்ற முடியாது: கமல்

சென்னை: தன்னுடைய ரசிகர்களை ஏமாற்றும் எண்ணம் இல்லை என நடிகர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.

சினிமா, தொலைக்காட்சி தொகுப்பாளர் அரசியல் என பல தளங்களில் பிஸியாக இயங்கிக் கொண்டிருக்கிறார் நடிகர் கமல்ஹசன்.

I wont cheat my fans kamal

விஸ்வரூபம் 2 திரைப்படத்தின் புரோமோஷன் வேலைகளில் பிசியாக இருக்கும் அவர், ரசிகர்களை ஏமாற்ற விரும்பவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில், விஸ்வரூபம் 2 திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்ட கருப்பு நிற ஹெலிகாப்டர் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த கமல் ஹாசன், முன்பெல்லாம் நேபாளத்திலிருந்து நடிகர்களை நடிக்க வைத்து விட்டு சீனர்கள் எனச் சொன்னாலும் நம்பும்படியாக இருக்கும். யாரும் அதைக் கேள்வி கேட்க மாட்டார்கள். ஆனால் இப்போது அப்படி இல்லை எனக் கூறினார்.

அதனால் தஜிகிஸ்தானில் படப்பிடிப்பு நடைபெற்ற போது கதைப்படி பிளாக் ஹாக் வகை ஹெலிகாப்டர்கள் தேவைப்பட்டதால் அதையே ஒரிஜினலாக பயன்படுத்தியதாகக் குறிப்பிட்டார். வேறு ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்தினால் புத்திசாலியான என்னுடைய ரசிகர்கள் எளிதில் கண்டுபிடித்து விடுவார்கள் எனவும் அவர் கூறினார்.

மேலும், நாட்டை விட்டு ஓடியவன் இன்று நாட்டை காப்பாற்ற போகிறானா என சிலர் கிண்டல் செய்கிறார்கள். ஆனால் நான் நாட்டை விட்டுப் போகிறேன் எனச் சொன்னது என்னுடைய பணியை சிறப்பாக செய்ய விடாமல் தடுத்ததற்காகத்தானே தவிர பயந்து அல்ல. அது இப்போது அவர்களுக்கு புரிந்துவிட்டது எனவும் கூறினார்.

கமல்ஹாசன், பூஜா குமார், ஆண்ட்ரியா மற்றும் பலர் நடித்துள்ள விஸ்வரூபம் திரைப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X