Don't Miss!
- Sports மினி சென்னையில் ஆடினோம்.. 2 நாளில் இதை விட அதிகமாக இருக்கும்.. மனம் திறந்து சொன்ன கே எல் ராகுல்
- Automobiles இன்டிகாவையே விற்பனையில் மிஞ்சிய டாடா பஞ்ச்! பலாபழத்தில் மொய்க்கும் ஈக்களைவிட மோசமாக மக்கள் மொய்க்குறாங்க!
- News இதுதான் நம்ம தமிழ்நாடு.. மூக்கு மேல் விரல் வைத்த ஈரோடு.. புது டிரஸ்ஸில்.. யாரிந்த 3 பெண்கள்.. சபாஷ்
- Lifestyle Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
சர்வதேச அளவில் சிறந்த நடிகர் விருது: விஜய் 'மெர்சல்' சாதனை
Recommended Video
சென்னை: மெர்சல் படத்தில் நடித்ததற்காக விஜய் சர்வதேச அளவில் சிறந்த நடிகராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அட்லி இயக்கத்தில் விஜய் அப்பா, மகன்கள் என்று 3 வேடங்களில் நடித்த படம் மெர்சல். இந்நிலையில் மெர்சல் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக சர்வதேச அளவில் வழங்கப்படும் ஐஏஆர்ஏ விருதுகளுக்கு விஜய்யின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டது.
சிறந்த நடிகர் பிரிவில் விஜய்யுடன், டேவிட் டென்னன்ட்(டான் ஜுவான் இன் சோஹோ), ஜான் பொயேகா(ஸ்டார் வார்ஸ்: தி லாஸ்ட் ஜெடி), கிறிஸ் அட்டோ(ஸ்விங்), ஜாக் பெர்ரி ஜோன்ஸ்(பாங்), டேனியல் கலுயா(கெட் அவுட்), ஜாக் மோரிஸ் (ஈன்ஸ்ட்என்டர்ஸ்), ஜேமி லோமாஸ் (ஹோலிஓக்ஸ்) ஆகியோரின் பெயர்களும் பரிந்துரைக்கப்பட்டது.
|
விஜய்
மெர்சல் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான விருதுக்கு விஜய் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஐஏஆர்ஏ அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டு அவரை வாழ்த்தி ட்வீட் போட்டுள்ளது.
|
மகிழ்ச்சி
சர்வதேச அளவில் விஜய்க்கு கிடைத்துள்ள கவுரவத்தை பார்த்து அவரின் ரசிகர்கள் பெரு மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விஜய்யை வாழ்த்தி ட்விட்டரில் ஏகப்பட்ட ட்வீட்டுகள் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். பிற நடிகர்களின் ரசிகர்களும் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
|
மாஸ்
தளபதி ரசிகனாக இருப்பதில் பெருமை. விஜய் எப்பொழுதுமே மாஸ் என்று அவரின் ரசிகர்கள் பெருமைபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
|
தமிழன்
ஐஏஆர்ஏ விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட ஒரே தமிழ் நடிகர் விஜய் தான். பரிந்துரை செய்யப்பட்ட பெருமையுடன் நின்றுவிடாமல் விருதை வென்று தமிழர்களை பெருமை அடைய வைத்துள்ளார்.